Oorukku Therkittu
Kummi Paattu
Hero Prabhu
Music Director Ilayaraja
Lyricist Kasthuri Raja
Singers Swarnalatha,Arunmozhi
Year 1999
Song Lyrics

குழு : தந்தன்னானினம் தந்தன்னானினம்
தந்தன்னானினம் தன்னான்னே
தந்தன்னானினம் தந்தன்னானினம்
தந்தன்னானினம் தன்னான்னே

பெண் : ஊருக்கு தெற்கிட்டு ஒத்தால மரம்
அங்கால நிக்குறா ராசம்மா
அங்கால நிக்குறா ராசம்மா..

ஆண் : யாருக்கும் சொல்லாம
மாமனும் வாறான்டி
மயங்கி சொக்குறா பாரம்மா
மயங்கி சொக்குறா பாரம்மா

பெண் : ஊருக்கு தெற்கிட்டு ஒத்தால மரம்
அங்கால நிக்குறா ராசம்மா
ஆண் : யாருக்கும் சொல்லாம மாமனும் வாறான்டி
மயங்கி சொக்குறா பாரம்மா...

பெண் : இழுத்து கிண்டுற கேப்ப களிப் போல
மனச கிண்டுது தன்னால
ஆண் : அட இருட்டுக்குள்ளார பேசுகிற சங்கதி
இங்ஙன வருது முன்னால

பெண் : அட பொங்குற பொங்குற
ஆசையில பொண்ணு
நிக்குறா நிக்குறா ஏக்கத்துல
ஆண் : அட கொஞ்சுற கொஞ்சுற
நோக்கத்துல மாமன்
சுத்துறான் சுத்துறான் வேகத்துல

பெண் : எட்டு கஜ சேல தானா இறங்குது கீழே
கட்டி வச்ச வேலியெல்லாம் வெலகும் தன்னாலே
ஆண் : விட்டு விட்டு காய்ச்சல் லேசா அடிப்பது போல
எட்டு வச்சி நான் நடந்தா மயக்கம் உன்னால

பெண் : அட சுத்துற சுத்துற வண்டு பாடும் சத்தம்
பூவுக்கு கேட்குது முன்னால
ஆண் : அடி கத்துன கத்துன காதல் கிளி சத்தம்
காதுல கேட்கும் தன்னால

பெண் : அட என்னா எப்படி சொல்ல
என்னமோ என்னமோ நடந்து போச்சு
குளிச்ச மேலு துவண்டு போச்சு மறுபடி குளிக்க
ஆண் : அட கொதிச்ச கோவம்
அடங்கி போச்சு அவனை நெனச்சா

பெண் : ஊருக்கு தெற்கிட்டு ஒத்தால மரம்
அங்கால நிக்குறா ராசம்மா
ஆண் : யாருக்கும் சொல்லாம மாமனும் வாறான்டி
மயங்கி சொக்குறா பாரம்மா...

பெண் : இழுத்து கிண்டுற கேப்ப களிப் போல
மனச கிண்டுது தன்னால
ஆண் : அட இருட்டுக்குள்ளார பேசுகிற சங்கதி
இங்ஙன வந்தது முன்னால

பெண் : அட பொங்குற பொங்குற ஆசையில பொண்ணு
நிக்குறா நிக்குறா ஏக்கத்துல
அட கொஞ்சுற கொஞ்சுற நோக்கத்துல மாமன்
சுத்துறான் சுத்துறான் வேகத்துல

பெண் : காட்டு பூவு வாசம் வீசி சிரிச்சதனாலே
காத்துப்பட்டு சாயுதம்மா காஞ்ச மரம் போல
ஆண் : ஊத்துகுள்ள மீறி தானா ஊறும் தண்ணி போல
ஏத்துகிட்ட ரெண்டு மனசும் பொங்கி வரும் மேலே

பெண் : அட வெட்கமும் வேகமும் சேர்ந்துகிட்டு
பொண்ண திங்குது திங்குது உன்னால
ஆண் : அடி ஆக்கமும் பக்கமும் பாக்க சொல்லி
இங்க ஆசையும் மீறுது உன்னால

பெண் : அட கும்மாளந்தான் போடுது யம்மா
வயசும் நெனப்பும் கட்டுப்படவில்ல
ஆக்க பொறுத்த மாமனுக்கு ஆற பொறுக்கலடி
ஆண் : அடி சேரத் துடிக்கும்
ஆம்பளைக்கு ஆச கொறையலடி

பெண் : ஊருக்கு தெற்கிட்டு ஒத்தால மரம்
அங்கால நிக்குறா ராசம்மா
ஆண் : யாருக்கும் சொல்லாம மாமனும் வாறான்டி
மயங்கி சொக்குறா பாரம்மா...

பெண் : இழுத்து கிண்டுற கேப்ப களிப் போல
மனச கிண்டுது தன்னால
அட இருட்டுக்குள்ளார பேசுகிற சங்கதி
இங்ஙன வந்ததது முன்னால

பெண் : அட பொங்குற பொங்குற ஆசையில பொண்ணு
நிக்குறா நிக்குறா ஏக்கத்துல
ஆண் : அட கொஞ்சுற கொஞ்சுற நோக்கத்துல மாமன்
சுத்துறான் சுத்துறான் வேகத்துல

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY