Uchi Veyilukku
Kummi Paattu
Hero Prabhu
Music Director Ilayaraja
Lyricist Kasthuri Raja
Singers Swarnalatha,Arunmozhi
Year 1999
Song Lyrics

பெண் : ஹாங் உச்சி வெய்யிலுக்கு
நச்சுப் பொதையிலே மச்சான் மறப்பு கட்டுறான்
குழு : ஹாங் உச்சி வெய்யிலுக்கு
வச்சுப் பொதையிலே மச்சான் மறப்பு கட்டுறான்
பெண் : அந்த மறப்புக்குள்ளாற வச்சு மொறச்சு பாக்குறான்
குழு : அந்த மறப்புக்குள்ளாற வச்சு மொறச்சு பாக்குறான்..

ஆண் : கரிசக் காட்டுக்குள்ள குடிசை போட்டு வச்சு
குழு : கரிசக் காட்டுக்குள்ள குடிசை போட்டு வச்சு
ஆண் : புதுப்புது ஆசையிலே பொழுது சாய காத்திருக்கேன்
கஞ்சி கலயம்தான்...ஹேய் ஹேய்
கஞ்சி கலயம்தான் கொண்டாட்டம் போடுது
உன் இஞ்சி இடுப்பு ஒடிப்புல நல்லா
வளைஞ்சு வளைஞ்சு கொஞ்சி நடக்கும் நடையிலே

ஆண் : ஆட்டுக்கடையில...ஹாங்
சாயந்திரம் பார்க்கையிலே...ஹாங்
ராத்திரிக்கு பாக்க வரச் சொல்லி
சொல்லிப்புட்டு போனியே
குழு : அட சொல்லிப்புட்டு போனியே

பெண் : ஆத்தா ஓறங்கல்ல...ஹாங்...
அப்பனும் ஓறங்கல்ல...அய்யோ....
ஒத்தையில உன்னைய பாக்க வரமுடியலையே
குழு : ஆமாம் வரமுடியலையே

ஆண் : சாமக்கோழி கூவி மெல்ல ஊரு சனம் எந்திரிச்சு......
ஆளுக்கொரு வார்த்த சொல்லி கேலிப் பேச்சு பேசிரிச்சு
பெண் : அடியாத்தி மானம் கெடும் வீட்டுக்கு போங்க
களை எடுக்க போகுறப்போ நான்
தோப்புக்கு வாரேன் நான் தோப்புக்கு வாரேன்

ஆண் : ஆங்..கஞ்சி கலயம்தான்...ஹேய் ஹேய்
கஞ்சி கலயம்தான் கொண்டாட்டம் போடுது
உன் இஞ்சி இடுப்பு ஒடிப்புல நல்லா
வளைஞ்சு வளைஞ்சு கொஞ்சி நடக்கும் நடையிலே

பெண் : ஹாங் உச்சி வெய்யிலுக்கு
வச்சுப் பொதையிலே மச்சான் மறப்பு கட்டுறான்
அந்த மறப்புக்குள்ளாற வச்சு மொறச்சு பாக்குறான்

ஆண் : கரிசக் காட்டுக்குள்ள குடிசை போட்டு வச்சு
குழு : கரிசக் காட்டுக்குள்ள குடிசை போட்டு வச்சு
ஆண் : புதுப்புது ஆசையிலே பொழுது சாய காத்திருக்கேன்

பெண் : ஹாங் உச்சி வெய்யிலுக்கு
வச்சுப் பொதையிலே மச்சான் மறப்பு கட்டுறான்
அந்த மறப்புக்குள்ளாற வச்சு மொறச்சு பாக்குறான்..

ஆண் : காஞ்ச புல்லுக்குள்ள நீ காலு வச்சு போகையில
காதுல சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தேன்
குழு : ஆமாம் ஓடி வந்து பார்த்தேன்
பெண் : நீண்ட மடுவுல வீடு பாத்து போகையிலே
கழுத்து மணி சத்தம் கேட்டு உன்ன தேடிப் பார்த்தேன்
குழு : ஆமாம் உன்ன தேடிப் பார்த்தேன்

பெண் : ஈரத் தலை உலர்த்தி சிக்கெடுப்பேன்
நீ வரும் வழிப் பாத்து தெனம் தெனம் காத்திருப்பேன்
ஆண் : என்ன இனிமேலும் ஏய்க்காதடி
பொண்ணு கேட்டு வாரேன்
பெண் : நான் அதுக்காக எங்கப்பன் கிட்ட
பேசி வைக்கப்போறேன் நான் பேசி வைக்கப்போறேன்

ஆண் : கஞ்சி கலயம்தான்...ஹேய் ஹேய்
கஞ்சி கலயம்தான் கொண்டாட்டம் போடுது
உன் இஞ்சி இடுப்பு ஒடிப்புல நல்லா
வளைஞ்சு வளைஞ்சு கொஞ்சி நடக்கும் நடையிலே

பெண் : ஹாங் உச்சி வெய்யிலுக்கு
வச்சுப் பொதையிலே மச்சான் மறப்பு கட்டுறான்
அந்த மறப்புக்குள்ளாற வச்சு மொறச்சு பாக்குறான்

ஆண் : கரிசக் காட்டுக்குள்ள குடிசை போட்டு வச்சு
குழு : கரிசக் காட்டுக்குள்ள குடிசை போட்டு வச்சு
ஆண் : புதுப்புது ஆசையிலே பொழுது சாய காத்திருக்கேன்

பெண் : ஹாங் உச்சி வெய்யிலுக்கு
வச்சுப் பொதையிலே மச்சான் மறப்பு கட்டுறான்
அந்த மறப்புக்குள்ளாற வச்சு மொறச்சு பாக்குறான்..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY