Aasai Machaan Vangi (solo)
Kummi Paattu
Hero Prabhu
Music Director Ilayaraja
Lyricist Kasthuri Raja
Singers Swarnalatha
Year 1999
Song Lyrics

அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்தம்மா புல்லரிப்பு
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்தம்மா புல்லரிப்பு

ஆச மனச தூண்டி அது மாமன் நெனப்ப கூறும்
தானா தந்தன தானா தானா தந்தன தானா
அடி பேச்சியம்மா மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு பாட்டு சொல்லியடி

அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்தம்மா புல்லரிப்பு

ஓட வழி போகையில அவன்
ஓடி வந்து வழி மறிச்சான்
தன்னான தன்னாதான தன்னான நன்னா
கூட வந்து குசும்பு பண்ணி
மெல்ல சேலையைத்தான் புடிச்சிழுத்தான்
தன்னான நன்னா தான தன்னான நன்னா

கட்டிக்கத்தான் போறேன் உன்ன
கட்டி கட்டிதான் புடிச்சான்
கட்டுப்பட்டு கட்டுப்பட்டு நான் கிடந்தேன்
தந்தன தந்தன நா

கண்ண கொஞ்சம் மூடிக்கிட்டேன்
உன் மடியில் சாஞ்சிக்கிட்டேன்
ரெக்கை கட்டி ரெக்கை கட்டி நான் பறந்தேன்
தந்தன தந்தன நா

அட கண்ணு முழிச்சா மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும் கனவுக்குள்ள
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு

தோடு ஒண்ணு போடணும்ன்னு
மெல்ல காத தொட்டான் காத தொட்டான்
தன்னான நன்னா தான தன்னான நன்னா
கொலுசு ஒண்ணு போடணும்ன்னு
அவன் காலத் தொட்டான் கால தொட்டான்

கை வளவி போட்டு விட
கையி ரெண்டதான் புடிச்சான்
கண்ணு ரெண்ட மூட சொல்லித் தான் இழுத்தான்
தந்தன தந்தன நா

மூக்குத்திய போட்டு விட
என் முகத்த தானே நிமிர்த்தி
நேருக்கு நேர் முன்ன வந்து தான் சிரிச்சான்
தந்தன தந்தன நா

அட கண்ணு முழிச்சா மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும் கனவுக்குள்ள

அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு
ஆச மனச தூண்டி அது மாமன் நெனப்ப கூறும்
தானா தந்தன தானா

அடி வாச கதவ சாத்தி மெல்ல
மறைஞ்சி பாக்க தோணும்..தானா தந்தன தானா
அடி பேச்சியம்மா மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு பாட்டு சொல்லியடி

அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
தந்தன தந்தா
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு
தந்தன தந்தா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY