Aasai Machaan Vangi
Kummi Paattu
Hero Prabhu
Music Director Ilayaraja
Lyricist Kasthuri Raja
Singers Swarnalatha,Arunmozhi
Year 1999
Song Lyrics

பெண் : அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்தம்மா புல்லரிப்பு
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்தம்மா புல்லரிப்பு

ஆண் : ஆச மனச தூண்டி அது மாமன் மனச கூறும்
தானா தந்தன தானா தானா தந்தன தானா
பெண் : அடி பேச்சியம்மா மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு பாட்டு சொல்லியடி

பெண் : அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்தம்மா புல்லரிப்பு

பெண் : ஓட வழி போகையில அவன்
ஓடி வந்து வழி மறிச்சான்
தன்னான நன்னாதான தன்னான நன்னா
ஆண் : கூட வந்து குசும்பு பண்ணி
மெல்ல சேலையைத்தான் புடிச்சிழுத்தான்
தன்னான நன்னா தான தன்னான நன்னா

பெண் : கட்டிக்கத்தான் போறேன் உன்ன
கட்டி கட்டிதான் புடிச்சான்
கட்டுப்பட்டு கட்டுப்பட்டு நான் கிடந்தேன்
தந்தன தந்தன நா

ஆண் : கண்ண கொஞ்சம் மூடிக்கிட்டேன்
உன் மடியில் சாஞ்சிக்கிட்டேன்
ரெக்கை கட்டி ரெக்கை கட்டி நான் பறந்தேன்
தந்தன தந்தன நா

பெண் : அட கண்ணு முழிச்சா மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும் கனவுக்குள்ள
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு

பெண் : தோடு ஒண்ணு போடணும்ன்னு
மெல்ல காத தொட்டான் காத தொட்டான்
தன்னான நன்னா தான தன்னான நன்னா
ஆண் : கொலுசு ஒண்ணு போடணும்ன்னு
அடி காலத் தொட்டான் காலத் தொட்டான்

பெண் : கை வளவி போட்டு விட
கையி ரெண்டதான் புடிச்சான்
கண்ணு ரெண்ட மூட சொல்லித் தான் இழுத்தான்
தந்தன தந்தன நா

ஆண் : மூக்குத்திய போட்டு விட
உன் முகத்த தான் நிமிர்த்தி
நேருக்கு நேர் முன்ன வந்து தான் சிரிச்சான்
தந்தன தந்தன நா

பெண் : அட கண்ணு முழிச்சா
மாமனத்தான் காணவில்லை
அங்க நடந்த கத அத்தனையும் கனவு குள்ள

ஆண் : அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு
பெண் : ஆச மனச தூண்டி அது மாமன் மனச கூறும்
தானா தந்தன தானா

ஆண் : வாச கதவ சாத்தி மெல்ல
மறைஞ்சி பாக்க தோணும்
தானா தந்தன தானா

பெண் : அடி பேச்சியம்மா மாரியம்மா சேந்து கும்மியடி
என் மாமனுக்கு தூது விட்டு பாட்டு சொல்லியடி
அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகைப்பூ
தந்தன தந்தா
அது தானாகத்தான் தந்ததம்மா புல்லரிப்பு
தந்தன தந்தா...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY