Vaigai Nadhi Karai
Nilave Mugam Kaattu
Hero Karthik & Ramki
Music Director Ilayaraja
Lyricist Vasan
Singers Hariharan
Year 1999
Song Lyrics

வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே
வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே

கண்கள் கலங்காதே நெஞ்சம் மயங்காதே
இங்கே உறவுண்டு என்றும் மறக்காதே
ஏழை எளியோரை தான் பூமி தாங்காதா
வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே

துன்ப மழை தன்னை தாங்கும்
சிறு குடை நான் ஆவேன்
வேனில் அனல் தன்னில்
தாகம் தணித்திடும் நீர் ஆவேன்

போகும் வழி எங்கும் உன்னை
தொடர்ந்திடும் காற்றாவேன்
சோகம் வருகையில் துன்பம்
துடைத்திடும் பாட்டாவேன்

ஏன் இந்த வாழ்க்கை என்று
ஏங்குகின்ற ஏழை இங்கு ஓர் கோடி
யாருக்கிங்கே சோகம் இல்லை
யார் மனதில் பாரம் இல்லை யம்மாடி

நல்ல நாட்கள் நமக்கிருக்கு அந்த
நம்பிக்கைதான் வந்து விட்டால் சோகமில்லை
வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே

நெஞ்சம் கனத்திடும் எண்ண சுமைகளை தாங்காதே
இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்று ஏங்காதே
கற்பனை கோட்டைகள் கட்டும்
பேச்சுக்களை காதில் வாங்காதே
ஓட்டை குடிசையில் இன்பமில்லை என எண்ணாதே

ஏழைக்கொரு ஏழை துணை
எவ்வுயிர்க்கும் தெய்வம் துணை பொன் மானே
நெஞ்சில் ஒரு வஞ்சம் இல்லை
நேசத்திற்கு பஞ்சம் இல்லை விண்மீனே

நல்ல வாழ்க்கை வந்து தீரும்
வரவில்லை என்றால்
தெய்வங்கள் தான் பொய்யடியோ
வைகை நதிக்கரை சின்ன மணிக்குயிலே
வாடி நிற்பதென்ன சொல்லடி பொன் மயிலே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY