Thannanthaniyaga Oru Theevundu
Nilave Mugam Kaattu
Hero Karthik & Ramki
Music Director Ilayaraja
Lyricist Vasan
Singers Ilayaraja
Year 1999
Song Lyrics

தன்னந் தனியாக ஒரு தீவுண்டு
தீவுண்டு அதில் நானுண்டு
அலையின் ஓசை அமைதி தேடும்
தனிமையின் பயணம் ஆரம்பம் ஆரம்பம்
எனக்கோர் துணையே நான் தானே
தன்னந் தனியாக ஒரு தீவுண்டு தீவுண்டு

அன்பு காதல் சோலைஅந்த தீவில் இல்லை
ஒற்றை குயில் தான் யாரை தேடுமோ
இளவேனில் தூண்டும் இன்ப சூழல் இல்லை
என்னை தேற்ற ராகம் பாடுமோ

பட்ட பகலாய் எரியுதே நிலவு
நெஞ்சில் கனலாய் தகிக்குதே உறவு
எங்கே இங்கே உலகம் இங்கே
தனிமைக்கு துணையானேன்

தன்னந் தனியாக ஒரு தீவுண்டு தீவுண்டு
தன்னந் தனியாக ஒரு தீவுண்டு
தீவுண்டு அதில் யாருண்டு
அலையின் ஓசை அமைதி தேடும்
தனிமையின் பயணம் ஆரம்பம்

ஆஆ ஆஆ…..
பத்து மாதம் சுமந்த தாயின் வேதனை
என்ன செய்து ஈடு செய்வதோ அவள்
போன பின்பு நண்பன் தாங்கினான்
என்ன செய்து நன்றி சொல்வதோ

மண்ணில் கேட்டு கிடைப்பதா அன்பு
நானும் கேட்காமல் வந்தது முன்பு
உறவாய் இங்கு அவனே உண்டு
காதல் தந்து நன்றி சொல்வேன்

தன்னந் தனியாக ஒரு தீவுண்டு
அங்கு யார் உண்டு அதில் நானுண்டு
அலையின் ஓசை அமைதி தேடும்
தனிமையின் பயணம் ஆரம்பம் ஆரம்பம்
எனக்கோர் துணையே நான் தானே

தன்னந் தனியாக ஒரு தீவுண்டு தீவுண்டு
அங்கு யார் உண்டு அதில் நானுண்டு….

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY