Sutrathe Boomi Thaaye
Nilave Mugam Kaattu
Hero Karthik & Ramki
Music Director Ilayaraja
Lyricist Vasan
Singers K.S.Chitra
Year 1999
Song Lyrics

சுற்றாதே பூமி தாயே நில்லு
என் மன்னன் எங்கே என்று சொல்லு
வீசாதே தென்றல் காற்றே நில்லு
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு

கோடி விண்மீன்களில்
எந்தன் விண்மீன் எங்கே
என்னை தாலாட்டுமே அந்த ராகம் எங்கே
எந்தன் சொர்க்கத்தை சொல்கின்ற சொல் ஏது

சுற்றாதே பூமி தாயே நில்லு
என் மன்னன் எங்கே என்று சொல்லு

அதிகாலையில் துயில் வேளையில்
கனவாக தீண்டி விட்டு நீ போனாய்
துயில் நீங்கினேன் உன்னை தேடினேன்
விழி தாண்டி தூரம் என்று நீ ஆனாய்

உள்ளுக்குள் உன்னை கண்டு கொண்டேன்
உன் கண்ணில் என்னை காணவேண்டும்
வானத்தில் வெண்ணிலாவின்
வீதி சொல்லாதோ உன்னை காணும் தேதி

உந்தன் தோளில் பூவாய் விழ வேண்டும்
எந்தன் சோகம் சொல்லி அழ வேண்டும்
அந்த நாள் காண என் நெஞ்சம் தவிக்கும்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

சுற்றாதே பூமி தாயே நில்லு
என் மன்னன் எங்கே என்று சொல்லு
வீசாதே தென்றல் காற்றே நில்லு
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஹா

ஒரு நாழிகை உன்னை பார்த்த பின்
மீண்டும் பார்வை போகும் இனி போகட்டும்
உந்தன் தேன் குரல் கொஞ்சம் கேட்ட பின்
எந்தன் ஜீவன் ஓயும் இனி ஓயட்டும்

என்றேனும் உன்னை காண கூடும்
என்று எண்ணி எந்தன் ஜீவன் வாழும்
சாகாத காதல் வரம் வேண்டும்
ஓயாமல் உன்னை தொழ வேண்டும்

காற்றை தேடும் புல்லாங்குழல் போலே
ஏங்கி பாடும் ஒற்றை குயில் ஆனேன்
உன்னை காணாமல் என் கண்கள் தூங்காது

சுற்றாதே பூமி தாயே நில்லு
என் மன்னன் எங்கே என்று சொல்லு
வீசாதே தென்றல் காற்றே நில்லு
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY