Chittu Parakkuthu
Nilave Mugam Kaattu
Hero Karthik & Ramki
Music Director Ilayaraja
Lyricist Mu.Metha
Singers Sujatha,Sankar Mahadevan
Year 1999
Song Lyrics

ஆண் :சிட்டு பறக்குது குத்தாலத்தில்
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாருமில்லா ஒரு வட்டாரத்தில்
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ

பெண் :ஒரு மொட்டு மலருது ரோசா
இங்கு முத்து குளிப்பது ராசா
மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி

ஆண் :சிட்டு பறக்குது குத்தாலத்தில்
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
பெண் :யாருமில்லா ஒரு வட்டாரத்தில்
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ

ஆண் :வெள்ளி கொலுசொலி கேட்டால்
விழிகள் தேடும் மனம் விரும்பி பாடும்
தங்க மணி குரல் கேட்டால்
தவழ்ந்து ஆடும் பொங்கி மனம் ததும்பி ஓடும்

பெண் :சின்ன சின்ன நெஞ்சில் வந்த கனவுகள்
என்னை மயக்குது ஏனோ
வண்ண வண்ணக்கிளி உன்னை சுற்றி சுற்றி
வட்டமடித்திட தானோ

ஆண் :ஆ தொட்டு தொட்டு விளையாடும் காற்று
தொட்டில் கட்டி தாலாட்டு பாடும்
பெண் :ஒரு சித்திரை பெண்ணுக்கு மாலை
வரும் சித்திரையில் ஒரு ஓலை

ஆண் :சிட்டு பறக்குது குத்தாலத்தில்
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
பெண் :யாருமில்லா ஒரு வட்டாரத்தில்
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ

ஆண் :ஒரு மொட்டு மலருது ரோசா
இங்கு முத்து குளிப்பது ராசா
மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி

பெண் :மஞ்சள் அரைக்குது வானம்
எனக்குதானே தினம் எனக்குதானே
நெஞ்சை இழுக்குது ராகம்
உனக்கு நானே இனி இங்கு உனக்கு நானே

ஆண் :இடை அசையுது இசை பிறக்குது
கொடிப் பறக்குது மேலே
மணி முடிகளும் மலை சிகரமும்
மலர் அடிகளின் கீழே

பெண் :ஆ முத்து முத்து நீர் தூவும்
மேகம் சுற்றி வந்து பூ தூவி போகும்
ஆண் :புது இரத்தின கம்பளம் போடு
முத்து முத்து தமிழிசை பாடு

பெண் :சிட்டு பறக்குது குத்தாலத்தில்
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
ஆண் :யாருமில்லா ஒரு வட்டாரத்தில்
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ

பெண் :ஒரு மொட்டு மலருது ரோசா
இங்கு முத்து குளிப்பது ராசா
ஆண் :மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி

பெண் :சிட்டு பறக்குது குத்தாலத்தில்
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
ஆண் :யாருமில்லா ஒரு வட்டாரத்தில்
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY