Meettadha Oru Veenai
Poonthottam
Hero Murali
Music Director Ilayaraja
Lyricist Mu.Metha
Singers Hariharan,Mahalakshmi Iyer
Year 1998
Song Lyrics

ஆண் :மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம்

பெண் :மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்

ஆண் :பளிங்கினால் ஒரு வீடு
அமைக்கவா பொன் மானே
பெண் :விழியினால் இரு தீபம்
ஏற்றவா அதில் தானே

ஆண் :மறந்த அந்தப் பாடலுக்கு
அடி எடுத்துக் கொடுக்கவா
பெண் :விருந்து என்னை அழைத்ததென்று
புதுக் கவிதை படிக்கவா
ஆண் :எரிமலையும் பனிமலை என்றே
மாறுது பைங்கிளி

பெண் :மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
ஆண் :ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம்
மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்

பெண் :கனவிலே துயில் நீங்கி
திரும்பினால் உன் உருவம்
ஆண் :முழு நிலா முகம் பார்க்க
மலர்ந்ததே உன் வடிவம்

பெண் :நடந்து செல்லும் வழி முழுதும்
என் நிழலை அனுப்பவா
ஆண் :துணைக்கு வந்த நிழல் அதற்கு
குடை எடுத்துப் பிடிக்கவா
பெண் :ஒரு கணமும் பல யுகம் என்றே ஆகுது
சொல் பைங்கிளி

ஆண் :மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்
பெண் :ஆகாயப் பூக்கள் மழை தூவும் நேரம் மனதின் ராகம்

ஆண் :மீட்டாத ஒரு வீணை எனை மீட்டும் நேரம்
இருவர் :புதிரான ஒரு பாடல் பொருள் சொல்லும் நேரம்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY