Iniya Malargal
Poonthottam
Hero Murali
Music Director Ilayaraja
Lyricist Vasan
Singers Ilayaraja
Year 1998
Song Lyrics

இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்
வசந்தம் வந்த போதும் வேனில் வந்த போதும்
என்றும் என்றும் கேட்கும் அன்பெனும் ராகமே

இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்

அள்ளி அள்ளி செல்லச் செல்ல அன்பு குறையாது
அன்னை தந்தை பாசம் இங்கே சொல்லி முடியாது
சொந்த பந்தம் வந்து நிற்க வரவு சொல்லும் வாசல்
பிரிந்திருக்கும் சேர்வதில்லை இந்த வீட்டு வாசல்

கற்பனையில் கூட இது போல் காண முடியுமா
ஏட்டில் கூட எழுத்தில் கூட எழுத முடியுமா
மண்ணில் ஒரு சொர்க்கம் என்று
சொன்னால் அது பொய் இல்லையே
என்றும் இது பூந்தோட்டமே ஹோ

இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்

அற்புதங்கள் ஆடி வரும் அன்னை மடி வீடு
சித்திரங்கள் பேச வரும் செல்லக் கிளிக் கூடு
நித்தம் ஒரு புத்தம் புது கோலங்களைப் போடும்
முற்றம் அதில் முத்துச் சுடர் ஆடும் இசை பாடும்

ஊருக்கென்று அன்பைச் சொல்லும் இந்த வீடுதான்
உறவு இந்த உலகம் என்று சொல்லும் வீடுதான்
மண்ணில் ஒரு சொர்க்கம் என்று
சொன்னால் அது பொய் இல்லையே
என்றும் இது பூந்தோட்டமே ஹோ

இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்
வசந்தம் வந்த போதும் வேனில் வந்த போதும்
என்றும் என்றும் கேட்கும் அன்பெனும் ராகமே

இனிய மலர்கள் மலரும்
இன்பம் என்னும் தோட்டம்
உலவும் தென்றல் பாடும் ஹோ
உறவு என்னும் தோட்டம்......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY