Kambikara Vetti
Komban
Hero S. Karthik
Music Director Gv prakash
Lyricist R. Thanikodi
Singers V.M.Mahalingam,Anandhu
Year 2015
Song Lyrics

கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசைக்காரன்
நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்னா
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்

அட சொந்த புத்தி உண்டு மூளக்குள்ள
சொல்லு புத்தி ஒண்ணும் தேவை இல்ல
தத்துவத்த புழிஞ்சி ஊத்த வல்ல
ரோஷத்துக்கு பொறந்த மூத்தப் புள்ள

கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசைக்காரன்
நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்னா
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்

சேலைக்கு பின்னாடி மோப்பம் புடிக்கும்
நாய் வால வெட்டணும் டா
அட நம்மூரு பொண்ணுங்க
நம் மேல வைக்குற நம்பிக்க முக்கியம் டா

தொண்ணூற தாண்டியும் நெஞ்ச நிமித்தும்
பாட்டிய பாத்துக்கடா
அவ பொன்னான காலடி மண்ணள்ளி நீ பூசி
பாவத்த தீத்துக்க டா

அடிச்சி சத்தியம் செய்யுறேன் டா
கருப்புசாமிக்கு நான் புள்ள டா
எதையும் சாதிக்கும் ஆம்புள்ள டா

கட்டுத்தறி அத்துகிட்டு பறக்கும் காளடா
சுத்துப்பட்டு எட்டு ஊரக் கலக்கும் பாருடா
எதிரால வந்துராத நரிவேல செஞ்சிராத
நெஞ்சுக்குள்ள அச்சம் இல்ல ஒரசி பாருடா
பஞ்சுக்குள்ள அக்கினிய மறச்சதாருடா

எத கட்டி ஆளப் போற சரிக்கட்டி வாழப்போற
கிடிகிட்டி தப்பு தார கிழிக்கட்டும் நம்ம ஊர
பள்ளிக்கூடம் சொல்லும் பாடம் அங்க வேற
நம்ம பட்டிக்காட்டு பாடம் தாண்டா இப்ப தேவ
அட எப்ப தாண்டா ஊரு நாட பாக்கப் போற

யே...வெல்லும் புலி ஒரு நாளும்
புல்ல திங்க போகாது
ஒத்தைக்கு ஒத்தையா தாக்கும்
புது ரத்தது வாசத்த கேக்கும்
வெறி உச்சத்தில் ஆடித்தான் தீக்கும்

இது சொல்லாம கொள்ளாம வெளங்கும்
அத சொன்னாலே தன்னால கலங்கும்
எவன் பின்னாலும் நிக்காத வீரத்ததானே
எந்நாளும் நம் பூமி வணங்கும்

புலி ஒத்தைக்கு ஒத்தையா தாக்கும்
புது ரத்தது வாசத்த கேக்கும்
வெறி உச்சத்தில் ஆடித்தான் தீக்கும்
இது சொல்லாம கொள்ளாம வெளங்கும்

அத சொன்னாலே தன்னால கலங்கும்
எவன் பின்னாலும் நிக்காத வீரத்ததானே
எந்நாளும் நம் பூமி வணங்கும்
சொல்லிக் கொடுக்கும்......

கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசைக்காரன்
நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்னா
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்.....அட்றா....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY