Appappa Kachchal
Komban
Hero S. Karthik
Music Director Gv prakash
Lyricist Mahalingam
Singers Shreya Ghoshal,G.V.Prakash
Year 2015
Song Lyrics

பெண் : அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு ஓஹோ
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு
முத்தத்தில் பத்து போடு தேச்சு
மொத்தத்தில் என்ன கஞ்சு காச்சு

பத்தியத்த முறிக்காத உங்க கையி
முப்பாலின் மூணாம் பால் சேத்து வைய்யி
அப்பாவா நீயாக சேட்ட செய்யி

ஆண் : வெக்கத்த பக்கம் வந்து பாத்து ஓஓ
வீராப்பு மட்டுப்பட்டு போச்சு
மல்லிப்பூ கூந்தல் மோந்து பாத்து..ஓஹோ
மச்சமும் நட்சத்திரம் ஆச்சு

தப்பு தண்டா செய்யாத வீரன்தான்டி
உன்கிட்ட நடப்பேனே தப்பாதான்டி
ஒப்பேத்த மாட்டேன்டி கிட்ட வாடி

குழு :தன்னானே நன்னாநானே
தான னே தனனானே நன்னே
ஹே தானான நனனானே
தானனே தந்தானே நனனானே....

பெண் : ஓஒ..வீட்டுல மத்தவங்க
பாக்காதப்போ சீண்டுவே
பாத்துட்டா சமாளிக்க ஏதோ
ஒண்ணு நோண்டுவே

பார்ப்பேன் அப்ப பார்ப்பேன்
அந்த அசட்டு சிரிப்பத்தான்
ஆனா எதிர் பாப்பேன் அந்த
திருட்டுத்தனத்ததான்

ஆண் : ரொம்பதான் அக்கறையா
வேலை எல்லாம் பாக்குற
அம்புட்டும் என்ன பாக்க
வைக்கத்தானே செய்யுற

உன் கண்ணு மட்டும் தான்டி
வேற எங்கோ பாக்குது
ஆனா ஒடம்பெல்லாம்
என்னை கண்ணால் தாக்குது

பெண் : அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு

குழு :தன்னானே நன்னாநானே
தான னே தனனானே நன்னே
ஹே தானான நனனானே
தானனே தந்தானே நனனானே....

ஆண் : சொம்புல தண்ணி மொண்டு மேலு கூச ஊத்துற
நெஞ்சுல சாச்சி வச்சு முந்தானைய துவட்டுற
போதும் இது போதும் பஞ்சு பஞ்சா பறக்குறேன்
நெஞ்சாங் குழிக்குள்ள வந்து நீச்சல் அடிக்குறேன்

பெண் : செவந்த நெத்தி மேல பச்ச குத்தி காட்டுனேன்
வெள்ளந்தி நெஞ்சுக்கார உன்ன வண்ணம் தீட்டுவேன்
நூறு ஜென்மம் போதாதையா வேண்டி கெஞ்சுவேன்
பாசம் அன்பில் தானே பெத்த தாய மிஞ்சுவேன்

பெண் : அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு
முத்தத்தில் பத்து போடு தேச்சு
மொத்தத்தில் என்ன கஞ்சு காச்சு

பத்தியத்த முறிக்காத உங்க கையி
முப்பாலின் மூணாம் பால் சேத்து வைய்யி
அப்பாவா நீ ஆக சேட்டே செய்யி

ஆண் : வெக்கத்த பக்கம் வந்து பாத்து
வீராப்பு மட்டுப்பட்டு போச்சு....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY