Vaadagai Veedu
Aandavan Kattalai
Hero Vijay Sethupathy
Music Director K
Lyricist Vivek Velmurugan
Singers K,Jiby,Deepu,Philip,Sajan
Year 2016
Song Lyrics

நைட் பத்து மணிக்குள்ள
லைட்ட அமத்தி படுக்கணும்
வாச தெளிச்சி கோலம் போட
வட்டிக்கு வாங்கணும்

நைட் பத்து மணிக்குள்ள
லைட்ட அமத்தி படுக்கணும்
வாச தெளிச்சி கோலம் போட
வட்டிக்கு வாங்கணும்

மீன திங்க ஆச வந்தா
வீட்ட காலி பண்ணனும்
கெஸ்ட்டு வந்து தங்கிடாம
கோஸ்டா நாமும் மாறணும்

துணிய துவைச்சி காய போட
சொரங்க பாத தோண்டனும்
மொட்டை மாடி சுத்தி பார்க்க
விசா வாங்கணும்

வீட்டு ஓனர் கரண்டு பில்ல
நாம சேர்த்து கட்டணும்
ஏ.சி போட்டு அவிங்க தூங்க
நாம புழுங்கி சாகணும்

தவிச்ச வாய்க்கு தண்ணி கேட்க
ரேஷன் கார்டை காட்டணும்
ஏற இறங்க வெறிச்சு பார்த்தா
இடத்தை மாத்தணும்

குருவி போல சிறுக சிறுக சேர்த்து
வீட்ட கட்டுறான்
அருவி போல பெருக பெருக
அட்வான்ஸ் வாங்கி குமிக்கிறான்

ஆஸ்பெட்டாஸ் வீட்ட கட்டி
தாஜ்மஹாலா பீத்துவான்
அதுக்கும் சேர்த்து பில்ல போட்டு
ரென்ட்ட ஏத்துவான்

ஏரி இருந்த இடத்தை வளைச்சி
வீட்ட கட்டி வாழுவான்
வீட்டு வரிய கட்டிடாம
டிமிக்கி குடுத்து சுத்துவான்

கார்மேகம் கார்மேகம்
பொத்துக்கிட்டு ஊத்துனா
வீட்டுக்குள்ள ஏரி ஓட
நீந்த சொல்லுவான்

நைட் பத்து மணிக்குள்ள
லைட்ட அமத்தி படுக்கணும்
வாச தெளிச்சி கோலம்
போட வட்டிக்கு வாங்கணும்

அளந்து கொடுக்கும் தண்ணியில
அம்புட்டும் கழுவி முடிக்கணும்
வாடகை வீட்டு ரூல்ஸ் எல்லாம்
வணங்கி குனியணும்......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY