Raagam Pudhu Raagam
Kan Simittum Neram
Hero M.Karthik
Music Director V.S.Narasimhan
Lyricist Tamizhiniyan
Singers K.J.Jesudass
Year 1988
Song Lyrics

ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்
ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்
விதியும் ஸ்ருதியும் பிறந்து வந்ததே

ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்
ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்
விதியும் ஸ்ருதியும் பிறந்து வந்ததே
ராகம் புது ராகம்.... ராகம் புது ராகம்

காலமெனும் சூறாவளி ஓர்நாளில் வீசியதே
நொடிப் பொழுதில் குறி தவறி
கனியொன்று வீழ்ந்ததே

காலமெனும் சூறாவளி ஓர்நாளில் வீசியதே
நொடிப் பொழுதில் குறி தவறி
கனியொன்று வீழ்ந்ததே

வினை யாரோ விதைத்தாரோ
விடை யார்தான் தருவாரோ
அடடா அவன் நாடகம் யார்தான் அறிவாரோ
வாழ்வே புதிரான போராட்டம்தானோ
உயிர்கள் இரண்டு பாடும் ஒரு தொடர்கதை...

ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்
விதியும் ஸ்ருதியும் பிறந்து வந்ததே
ராகம் புது ராகம்.... ராகம் புது ராகம்

தேனாகவும் பாலாகவும் ஏனிங்கு மாறுகிறாள்
முழு நிலவு இளம் பிறையை வளர்த்திட தேய்கிறாள்
தேனாகவும் பாலாகவும் ஏனிங்கு மாறுகிறாள்
முழு நிலவு இளம் பிறையை வளர்த்திட தேய்கிறாள்

அருகினிலே தவறிருந்தும்
காவல் எங்கோ தேடிடுதே
புலியின் கடுங்கோபமே மானும் அறியாது
விழித்தால் உயிரோடு தான் வாழ்வதேது
இறைவன் எழுதும் தீர்ப்பே ஒரு விடுகதைதான்

ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம்
விதியும் ஸ்ருதியும் பிறந்து வந்ததே
ராகம் புது ராகம்.... ராகம் புது ராகம்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY