
Hero | Rajakumaran |
Music Director | S.A.Raj Kumar |
Lyricist | Anthiyur Nithya |
Singers | Kalyani |
Year | 2013 |
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே
பாலை நிலத்தின் வெள்ளை நிலா
நெய்தல் நிலத்தின் முத்து நிலா
மருதம் முல்லை குறிஞ்சி நிலங்கள்
ஆள வந்த பிள்ளை நிலா
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே...
மாமோய்....சாப்பிட வருவீங்களா
நீ சாப்பிட்டியா.....
நீங்க சாப்பிடாம நான் எப்படி மாமா சாப்பிடறது
சொல்லவா......ஆங்....
மல்லிகைப்பூ நிற சாதத்த
வாழைத்தண்டு நிறக் கையில் எடுத்து
தாமரைப்பூ நிற வாயிலப் போட்டு
முத்து நிறப் பல்லுல மென்னு சாப்பிடனும்...
தேனுண்டு தினையுண்டு தமிழ் பேசும் கிளியுண்டு
குறிஞ்சி நிலம் உண்டு
முயலுண்டு மானுண்டு திருமாலின் அருளுண்டு
முல்லை வனம் உண்டு
அன்னம் போல் நடை சின்னத் தாமரை
உன்னை மருதம் வாழ்த்துமே
தாழம்பூவினை முத்து புன்னகை
உன்னை நெய்தல் போற்றுமே
பாலை நிலமும் ஏழையில்லை
உன் பார்வை பட்டால் பூக்குமே
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே....ஆஆ
மலையென்றும் காடென்றும்
வயலென்றும் கடலென்றும்
நிலங்கள் ஐந்து சொல்
உடன் பாலை சேர்த்து சொல்
தினையென்றும் வரகென்றும்
நெல்லென்றும் மீனென்றும்
உணவு ஐந்து சொல்
அந்த பாலை உணவும் சொல்
பாலை நிலமொரு ஏழை நிலமடி
எந்தன் மாமன் போலத்தான்
அங்கு பூக்குமே சின்னப்பாதிரி
எந்தன் அன்பை போலத்தான்
ஆசை நூலில் ஆடும் அத்தான்
என் ஐந்து நிலமும் உனக்குத்தான்
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே
பாலை நிலத்தின் வெள்ளை நிலா
நெய்தல் நிலத்தின் முத்து நிலா
மருதம் முல்லை குறிஞ்சி நிலங்கள்
ஆள வந்த ஆசை நிலா
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே...
வா வா வெண்ணிலவே
வா வா வெண்ணிலவே......

COMPILED AND UPDATED BY