Nayagan Ennai Azhaithan
Thirumathi Tamizh
Hero Rajakumaran
Music Director S.A.Raj Kumar
Lyricist Morappur Oviyan
Singers Vijay Yesudas,Kalyani
Year 2013
Song Lyrics

நாயகன் என்னை அழைத்தான்
நாயகன் என்னை அழைத்தான்
அழகான தேவதையே
எனக்கு நீ வேண்டும் என்றான்
மணமாலை மங்கல நாண்
எனக்கென சூடி தந்தான்

வானவில் எடுப்பான் வண்ணம் அறியாமல்
நட்சத்திரம் பறிப்பான் வானமறியாமல்
காதல் கொடுத்தான் கண்கள் அறியாமல்

நாயகன் உன் நாயகன் நாயகன்
நாயகன் நாயகன் உன்னை அழைத்தான்...
புதிதான கவிதை நீ புதிதான கதையும் நீ
புதிதான புதிரும் நீ என்று சொன்னேனே

அம்மாடி மறுநொடியே
அத்தனையும் பொய் என்றான்
சரியான திருடி நீ என்றும் சொன்னானே

தூய்மையான எந்தன் காதல் மனதை
நீயும் திருடிக் கொண்டது உண்மையே
காலம் முழுதும் அதற்காக காதலுடன்
சேவை செய்யும் பெண்மையே

காதில் கம்மல் ஆவேனே
காலில் கொலுசாய் இருப்பேனே
இடுப்பில் கொடியும் ஆவானே
இம்சைகள் பலவும் தருவானே
காதல் தலைவன்.......ராஜகுமாரன்

நாயகன்.....என் நாயகன் நாயகன்
நாயகன் நாயகன் உன்னை அழைத்தான்...

திருக்கோவில் வருவானே
வரம் தந்து மறைவானே
கற்பூர தீபம் போல் காற்றில் மிதப்பானே

அறியாமல் ரசிப்பாளே அறியாமல் சிரிப்பாளே
நான் பார்த்தால் மண் பார்த்து நகத்தை கடிப்பாளே
பார்த்த நொடியில் எந்தன் நெஞ்சிலுள்ள
கதை யாவும் படித்து முடித்தான்

பாத்திரம் அறிந்து நல்ல பிச்சை போட
காதல் தலைவி கிடைத்தாள்
வெட்கம் என்னை கைவிட்டு
அச்சம் கொஞ்சம் கொண்டேனே
மிச்சம் மீதி இல்லாமல்
முழுசாய் உன்னைக் கண்டேனே
காதல் திருடன்.......ராஜகுமாரன்

நாயகன் உன் நாயகன் நாயகன்
நாயகன் நாயகன் என்னை அழைத்தான்...
வானவில் எடுப்பான் வண்ணம் அறியாமல்
நட்சத்திரம் பறிப்பான் வானமறியாமல்
காதல் கொடுத்தான் கண்கள் அறியாமல்

நாயகன்.....என் நாயகன் நாயகன்
நாயகன் நாயகன் என்னை அழைத்தான்...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY