Chikkanamai Vaazhanum
Muthalali
Hero S.S.Rajendran
Music Director K.V.Mahadevan
Lyricist Ka.Mu.Sherif
Singers A.G.Rathnamala,Kasthuri
Year 1957
Song Lyrics

சம்பளந்தான் உயர்ந்திட்டாலும் போதவில்லை
சண்டை போட்டு போனஸ் கேட்டும் பத்தவில்லை
நம்மைப் போல ஏமாளிகள் யாருமில்லை
நமக்கு நாமே திருந்தாவிட்டால் பயனுமேயில்லை

சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும்
சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும்
பக்குவமாய் குடும்பத்தை நீ அண்ணன்மாரே
பாதுகாக்க தெரியவேணும் அண்ணன்மாரே....

சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும்
சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும்

சம்பளத்தை வாங்கி வீண் செலவு செய்யாதே
தரித்திரத்தில் குடும்பம்தனை தவிக்கவிடாதே
அம்பலத்தில் மேடை போட்டு பொய்யை சொல்லாதே
யாரையும் திட்டிப் பேசாதே அதனால் லாபம் வராதே

சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும்
சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும்..

கூலிதன்னை உயர்த்தும்படி கேட்டுப் பார்த்தேன்
கூட்டம் கூடி ஸ்ட்ரைக் செய்ய தெரிந்து கொண்டோம்
ஆலையிலே வாங்குகின்ற சம்பளத்தை
அளவுடனே செலவு செய்ய பழகவில்லை

சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும்
சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும்....

ஊதாரி செலவுகளை குறைத்து கொண்டாலே
ஒழுங்காக வேலைக்கு நாம் சென்று வந்தாலே
ஆதாயம் அடைந்திடலாம் என்றும் வாழ்விலே
இன்பம் பெருகும் தன்னாலே
துயரம் தீரும் மண்மேலே ..

சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும்
சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும்
பக்குவமாய் குடும்பத்தை நீ அண்ணன்மாரே
பாதுகாக்க தெரியவேணும் அண்ணன்மாரே....

சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும்
சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY