Enga Mudhalali Thanga
Muthalali
Hero S.S.Rajendran
Music Director K.V.Mahadevan
Lyricist Ka.Mu.Sherif
Singers A.G.Rathnamala,V.N.Sundaram,S.V.Ponnusami,G. Kasthuri
Year 1957
Song Lyrics

எங்க முதலாளி தங்க முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி
ஏழைகளின் துயரை நீக்கும் நல்ல முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி
ஏழைகளின் துயரை நீக்கும் நல்ல முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி..

கங்காணிகள் சொல்லைக் கேட்டு
நல்லவரை நீக்கும் கெட்ட குணம்
சற்றுமில்லா உத்தம முதலாளி...ஓஓஒ.

கங்காணிகள் சொல்லைக் கேட்டு
நல்லவரை நீக்கும் கெட்ட குணம்
சற்றுமில்லா உத்தம முதலாளி

சம்பளத்தை உயர்த்தி தர அஞ்சா முதலாளி
தக்கப்படி போனஸல்லாம் கொடுக்கும் முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி..

தொழிலாளி உயர்வடைந்தால் தொழில் உயரும்
என்று முழு மனதாய் எண்ணுகின்ற முதலாளி
வேலைக்காரன் குறைகள் தன்னை
நேரடிடாய் கேட்டு கேட்டு
வேண்டுவதை உடனடியாய் செய்யும் முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி..

சீமை வரை சென்றவராம் எங்க முதலாளி
தேச நிலைக் கண்டவராம் எங்க முதலாளி
தீமை கண்டு அஞ்சுபவர் எங்க முதலாளி
சினந்து பேச அறியாதவர் எங்க முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி..

உழைப்பாளிகள் குடியிருக்க வீடு கட்டி தருவான்
உணவு உடை இல்லையென்ற குறையகற்றி வைப்பான்
களிப்புடனே நம்ம பிள்ளை கல்வி கற்று வாழ
கல்லூரிகள் இனாமாக கட்டியே தருவான்
எங்க முதலாளி தங்க முதலாளி..

முதலாளியும் தொழிலாளியும் ஒற்றுமையாய் வாழ
முடிந்ததெல்லாம் செய்யும் எங்க முதலாளி
இடமறிந்து வேலை வாங்க துஷ்டர்களை நீக்கி
என்றென்றுமே நம்பிக்கையை நம்பும் முதலாளி

எங்க முதலாளி தங்க முதலாளி
ஏழைகளின் துயரை நீக்கும் நல்ல முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி
ஏழைகளின் துயரை நீக்கும் நல்ல முதலாளி
எங்க முதலாளி தங்க முதலாளி..



COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY