Kunguma Pottukkara
Muthalali
Hero S.S.Rajendran
Music Director K.V.Mahadevan
Lyricist Ka.Mu.Sherif
Singers T.M.Soundarajan,M.S.Rajeswari
Year 1957
Song Lyrics

குங்குமப் பொட்டுக்காரா கோண கிராப்புக்காரா
உன்னையே நான் பிரியேனே ஓஓஒ
உன்னையே நான் பிரியேனே..

மத்தாப்பு சேலைக்காரி மகிழம்பூ ரவிக்கைக்காரி
உன்னையே நான் மறவேனே ஓஓஒ
உன்னை நான் மறவேனே

சைக்கிள் ஓட்டும் ஆசை மச்சான்
சாலை நமது இல்லை மச்சான்
சரியா போகணும் இல்லையின்னா
முதுகு வீங்கிப் போகும் ஓஓஓ...

புளிமூட்டைப் போலே நீயும்
பின்னாலே ஏறி வந்தா
எளிதாக சைக்கிள் ஓட்ட முடியுமா ஓஓஒ..

குறும்பாக பேசும் உங்க
குணத்தையே பார்க்கும்போது
மரத்திலே ஏறுகின்ற மந்தி போல் இருக்குது

கிண்டலாய் பேசுகின்ற கண்ணாட்டி பாரு அங்கே
உன்னைப் போல் பூதம் ஒன்று நிக்குது

அழகில்லா எந்தன் மீது
ஆசை நீங்க கொண்டதேன்
விளையாட்டு பேச்சுக்கெல்லாம்
கோபம் நீயும் கொள்வதேன்

விளங்குது எண்ணம் சும்மா ஏமாறமாட்டேன்
வள்ளியே உன்னைவிட்டு நான் போகமாட்டேன்
மன்னிப்பு கேட்காவிட்டால் நான் வரமாட்டேன்
மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு

சும்மா சொன்னா போதுமா
தப்பு தப்பு தப்பு ம்ம்ம்ம் வா....

குங்குமப் பொட்டுக்காரா கோண கிராப்புக்காரா
உன்னையே நான் பிரியேனே ஓஓஒ
உன்னையே நான் பிரியேனே..

மத்தாப்பு சேலைக்காரி மகிழம்பூ ரவிக்கைக்காரி
உன்னையே நான் மறவேனே ஓஓஒ
உன்னை நான் மறவேனே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY