Hey Naana Vayasu
Salem Vishnu
Hero Thiagarajan
Music Director Sangeetharajan
Lyricist Vairamuthu
Singers K.S.Chitra
Year 1990
Song Lyrics

ஹே நானோ வயசுப் புள்ள
ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல
இது எதனால அட அதனால

ஒரு சாயங்கால காத்து
என்ன தடவிப் போச்சு நேத்து
வந்து முழுசா தழுவாதா
என் முகவரி தெரியாதா
என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண....

ஹே நானோ வயசுப் புள்ள
ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல

ராவெல்லாம் பகலாக பகலெல்லாம் ராவாக
நான் கொண்ட அழகெல்லாம் அனலில் மெழுகாக
என் கண்ணே பகையாக என் தேகம் சுமையாக
தனியாகி போனேனே தரையில் மீனாக

உன்னோடு நானாட ஹே பன்னீரில் நீராட
என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண....
ஹே நானோ வயசுப் புள்ள
ரெண்டு நாளா ஒறக்கம் இல்ல....

அறியாத பொண்ணாக ஆளாகி நின்னேனே
அங்கங்கே தொட்டானே ஆச மச்சானே
கண்ணென்றால் இமையோட பெண்ணென்றால் ஆணோட
எம் மனசு என்னாச்சு போகுது உன்னோட

அச்சாணி போடாத சிங்காரத் தேரானேன்
ஹோய் என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண....

ஹே நானோ வயசுப் புள்ள
ஹே நானா தந்ததனன்னானா
இது எதனால....தந்ததனன்னானா

ஒரு சாயங்கால காத்து
என்ன தடவிப் போச்சு நேத்து
வந்து முழுசா தழுவாதா
என் முகவரி தெரியாதா

என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண....
என்ன பண்ண என்ன பண்ண
என்ன பண்ண என்ன பண்ண.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY