Yamini Yamini
Yei Nee Romba Azhaga Irukey
Hero Shyam
Music Director Arvind - Shankar
Lyricist Pa vijay
Singers Haris Ragavendra
Year 2002
Song Lyrics

யாமினி யாமினி என் காதலி யாரடி
என்னிடம் என்னிடம் சொல்லடி
கிராமமா நகரமா இந்தியா தாண்டியா
எங்குதான் வாழ்கிறாள் சொல்லடி
யாமினி யாமினி என் காதலி யாரடி..

விட்டு விட்டு அடிக்கிறதா
இதயம் சட்டென்று சுடுகிறதா
திடுக்கு திடுக்கு என்றுதான்
உயிர் தட்டுக்கெட்டு தவிக்கிறதா ( 2 )

தேடினேன் தேடினேன்
பார்க்கும் இடமெங்கும் தேடினேன்
என்னவள் என்பவள் யார்
என்னவள் என்பவள் யார்…..ஓஒஹ்."

யாமினி யாமினி என் காதலி யாரடி
என்னிடம் என்னிடம் சொல்லடி.....

என்னை கொ-கொ-கொ-கொல்ல
காத்திருக்கும் பேரரசி யாரது
என்னை வெல்லும்
சம்பல் காட்டு கொள்ளைக்காரி யாரது

நுரையிரல் பக்கத்தில
நூறு கிலோ கல்லைக் கட்டி
ஊஞ்சல் ஆட்டி போகிறவள் யாரது..ஹோஹோ...

மனம் என்னும் மண்டபம்
மௌனமாய் உள்ளது யாரது யாரது
மாயஜாலமாய் உள்ளது
என்னவள் என்பவள் யார்
என்னவள் என்பவள் யார்..

விட்டு விட்டு அடிக்கிறதா
இதயம் சட்டென்று சுடுகிறதா
திடுக்கு திடுக்கு என்றுதான்
உயிர் தட்டுக்கெட்டு தவிக்கிறதா

யாமினி யாமினி என் காதலி யாரடி
என்னிடம் என்னிடம் சொல்லடி.....

நெஞ்சில் எந்தன் நெஞ்சில்
போர்க்கப்பல் வேகமாக மோதுதே
கண்ணில் இமை ரெண்டும்
பல்லவரின் கல்வீச்சில் இறங்குதே

சீனா சுவர் நீளத்திலே
காதல் கடிதம் தீட்டி வைத்து
அவளுக்கு காத்துக்கொண்டிருக்கேன்ஓஒஹ்

நிலவுக்கு பின்புறம் அவள்
புகைப்படம் இருக்குமோ
என்னவள் சுவாசத்தை சுமந்து
போகும் இளம் தென்றலே
என்னவள் என்பவள் யார்
என்னவள் என்பவள் யார்...ஆஆஆஆ..

யாமினி யாமினி என் காதலி யாரடி
என்னிடம் என்னிடம் சொல்லடி
யாமினி சொல்லடி.....ஓஹ்ஹ்ஹ
யாமினி சொல்லடி.....ஓஹ்ஹ்ஹ

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY