Poi Sollalaam Poi Sollalaam
Yei Nee Romba Azhaga Irukey
Hero Shyam
Music Director Murugan
Lyricist Thamarai
Singers Anuradha Sriram,Unni Krishnan
Year 2002
Song Lyrics

ஐ ய ய ய யோ
மனம் டிப்பு டிப்பு டப்பென அடிக்குது அடிக்குது
ஆடோம் பாம் போல் டும்ன்னு வெடிக்குது
ஐ ய ய ய யோ... ( 2 )

பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
டன் டன்னாக பொய்யே சொல்லலாம்
பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
காசா பணமா பொய்யே சொல்லலாம் ஹே ஹே

பெண்ணே நீ அழகான பெண் இல்லையே
உன் மேலே காதல் வரவில்லையே
போடா போடா சின்ன பையனே என்
இதயத்தை உனக்கு தரவில்லையே

பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
டன் டன்னாக பொய்யே சொல்லலாம்
பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
காசா பணமா பொய்யே சொல்லலாம்...

ஐ ய ய ய யோ
மனம் டிப்பு டிப்பு டப்பென அடிக்குது அடிக்குது
ஆட்டோம் பாம் போல் டும்ன்னு வெடிக்குது
ஐ ய ய ய யோ... ( 2 )

நிலவுக்கு வான் உள்ளதே சங்கத் தமிழுக்கு ழ இல்லையே
மின்சாரம் யார் கண்டது எடிசன் சம்சாரம்தான் கண்டது
வாசுகி வள்ளுவனை டா போட்டுத்தான் திட்டுவாள்
ராமனின் தலையிலே சீதை நட்டுன்னு குட்டுவாள்

சிம்லாவில் எப்போதும்தான் குளிர் அடிக்காது
குற்றாலம் போய்விட வேண்டாம் நீர் கிடைக்காது
பீச்சுக்கே போகாதவர்கள் நாம்தானே
இளமைக்கு பஜகோவிந்தம் மிகவும் பிடிக்கும் அட

பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
டன் டன்னாக பொய்யே சொல்லலாம்
பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
காசா பணமா பொய்யே சொல்லலாம்...

ஐ ய ய ய யோ
மனம் டிப்பு டிப்பு டப்பென அடிக்குது அடிக்குது
ஆட்டோம் பாம் போல் டும்ன்னு வெடிக்குது
ஐ ய ய ய யோ... ( 2 )

பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம்
பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம்

உன் பேரை சொல்லாவிட்டால்
எந்தன் உள்நாக்கில் தித்திக்குதே
நீ தந்த கடிதங்களை குப்பை கூடைக்குள் நான் வீசுவேன்

உன்னை நான் மறந்துதான்
மூன்று ராத்திரி தூங்கினேன்
நீ இல்லா கனவுகள் நான்கு ராத்திரி காண்கிறேன்

உன் பெயரை யாரும் சொன்னால் காதை அடைப்பேன்
நீ மட்டும் எதிரே வந்தால் எரிச்சல் அடைவேன்
பெற்றோர்கள் சொல்லும் ஆணை திருமணம் செய்வேன்
நீ போனால் இன்னொரு பெண்ணை காதல் செய்வேன் அட

பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
காசா பணமா பொய்யே சொல்லலாம்...
பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்
பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம்
பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம்

ஐ ய ய ய யோ
மனம் டிப்பு டிப்பு டப்பென அடிக்குது அடிக்குது
ஆட்டோம் பாம் போல் டும்ன்னு வெடிக்குது
ஐ ய ய ய யோ...
பொய்யை பொய்யின்றி பொய்யாய் சொல்லலாம்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY