Kadhal Vanthucho
Yei Nee Romba Azhaga Irukey
Hero Shyam
Music Director Raaghav Raja
Lyricist Pa vijay
Singers Raaghav Raja
Year 2002
Song Lyrics

ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ

என்னை நானே மெல்ல கொஞ்சிக் கொள்ளவோ
முத்தம் தந்து இரு கன்னம் கிள்ளவோ
அச்சோ அச்சோ என ரொம்ப தோணுதே
அச்சோ அச்சோ ஏனோ ஆசை கூடுதே

எண்ணத்தில் சடுகுடுகுடுவென
நெஞ்சத்தில் படபடபடவென
ஆசை வந்து கொத்திச்சோ ( 2 )

ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ

கொஞ்சம் வெய்யிலும் உண்டு
கொட்டுகின்ற பனி உண்டு
ரெண்டும் நெருங்கி பழக
இன்று பொழியும் மழை
சொட்டு சொட்டு சொட்டு சொட்டாய்
மண்ணில் சிதறி விழுக

மேகங்கள் சந்தித்து ஊர் வம்பு பேசிட
விண்மீன்கள் கோவித்து ஆங்காங்கே அழுதிட
பழைய நிறங்களில் புதிய மலர்கள்
புதிய இசையில் பழைய குயில்கள்
வானவில்லை தின்று வசந்தமாகி நின்றேன்

ஒஹ்ஹ இது காதல் காலமடி ஏன் சகியே
இது காதல் காலமடி
நெஞ்சுக்குள் எங்கேயோ கேட்கின்ற
ராகத்தில் ரகசிய ஆலாபனை

இது காதல் காலமடி ஏன் சகியே
இது காதல் காலமடி
ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ
ஒரு காதல் வந்துச்சோ ஒரு காதல் வந்துச்சோ

மெல்ல நகர்ந்து வரும் சூரியனும்
ஓடி சென்று கடலின் மடியில் விழுமே
ஏதோ எடுக்கவென ஓடி வரும் வெள்ளலைகள்
மெல்ல திரும்பி செல்லுமே
பூ தாங்கும் பாரத்தில் காம்பொன்று சாய்ந்திட
சட்டென்று கை நீட்டி இலை ஒன்று தாங்கிட

குளத்து நீரிலே தலையை தூக்கும்
இளைய கமலம்
சிரித்து தீர்க்கும் யாருக்காக
மலர்ந்த கவிதையை அலை சேர்க்கும்

இது காதல் காலமடி ( காலமடி )
ஒஹ்ஹ இது காதல் காலமடி என் சகியே
இது காதல் காலமடி
முகமெல்லாம் கால் உண்டு
நெஞ்சுக்குள்தான் வந்து கதக்களி செய்கின்றதே

ஒரு காதல் வந்துச்சோ......ஓஓஓஒஹ்
ஒரு காதல் வந்துச்சோ....ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
ஒரு காதல் வந்துச்சோ....ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்....
ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY