Veredhuvum Nijame Illai
Zero
Hero Ashwin Kakkumanu
Music Director Nivas K. Prasanna
Lyricist Madhan Karky
Singers Haricharan
Year 2016
Song Lyrics

வேறெதுவும் நிஜமே இல்லை
நாம் இருவர் நிஜமே
வேறெதுவும் கனவே இல்லை
நாம் இருவர் கனவே

வழியும் துளிகள் நிஜமா இல்லை
துடைக்கும் விரலோ நிஜமே...
இதழின் முத்தம் கனவா இல்லை
முடியும் நொடியோ கனவே..

உயிரே...உயிரே..விழியோ நிஜமே
அழகே...அழகே..இமைதான் கனவே
திறவாயடி......திறவாயடி.....

வேறெதுவும் நிஜமே இல்லை
நாம் இருவர் நிஜமே ஹே…….

இருளிலே புதைகிறாய்
ஒளியென வருகிறேன்
ஒலியிலே தொலைகிறாய்
அமைதியை தருகிறேன்

எதனால் விழியில் மயக்கம்
எதனால் மனதில் தயக்கம்
உறவே உறவே சிறகோ நிஜமே
இணையே இணையே வானோ கனவே
மறவாயடி.....மறவாயடி...

வேறெதுவும் நிஜமே இல்லை
நாம் இருவர் நிஜமே

வழியும் துளிகள் நிஜமா இல்லை
துடைக்கும் விரலோ நிஜமே...
இதழின் முத்தம் கனவா இல்லை
முடியும் நொடியோ கனவே...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY