Paasam Ennum Noolil
Nee Sirithal Deepavali
Hero Sivakumar & Nizhalgal Ravi
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singers Ilayaraja
Year 1990
Song Lyrics

பாசம் என்னும் நூலில் ஆடும்
பொம்மை எல்லோரும்
பாசம் என்னும் பாடல் தானே
அன்பின் சங்கீதம்

அன்னை கொண்ட பாசம் தன்னை
தொட்டில் சொல்லாதோ
தாரம் கொண்ட பாசம் தண்ணி
கட்டில் சொல்லாதோ

பாசம் என்னும் நூலில் ஆடும்
பொம்மை எல்லோரும்
பாசம் என்னும் பாடல் தானே
அன்பின் சங்கீதம்

உள்ளம் ரெண்டு ஒன்றை ஒன்று
பற்றி கொண்டாடும்
சொந்தம் எல்லாம் பந்தம் எல்லாம்
பாசம் என்றாகும்

உள்ளம் ரெண்டு ஒன்றை ஒன்று
பற்றி கொண்டாடும்
சொந்தம் எல்லாம் பந்தம் எல்லாம்
பாசம் என்றாகும்

காளை நெஞ்சும் கன்னி பெண்ணும்
காவல் கொள்ளாது
ஆசை கொண்டு பேசும் வார்த்தை
பாசம் என்றாகும்

பாசம் என்னும் நூலில் ஆடும்
பொம்மை எல்லோரும்
பாசம் என்னும் பாடல் தானே
அன்பின் சங்கீதம்

அன்னை மீது தந்தை வைத்த
பாசம் இல்லாது
பிள்ளை என்ற செல்வம் ஒன்று
மண்ணில் வாராது

அன்னை மீது தந்தை வைத்த
பாசம் இல்லாது
பிள்ளை என்ற செல்வம் ஒன்று
மண்ணில் வாராது

பாசம் என்னும் தீபம் ஏற்றும்
இல்லம் தெய்வீகம்
இன்றும் என்றும் அங்கே காணும்
அன்பின் வைபோகம்

பாசம் என்னும் நூலில் ஆடும்
பொம்மை எல்லோரும்
பாசம் என்னும் பாடல் தானே
அன்பின் சங்கீதம்

அன்னை கொண்ட பாசம் தன்னை
தொட்டில் சொல்லாதோ
தாரம் கொண்ட பாசம் தண்ணி
கட்டில் சொல்லாதோ

பாசம் என்னும் நூலில் ஆடும்
பொம்மை எல்லோரும்
பாசம் என்னும் பாடல் தானே
அன்பின் சங்கீதம்.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY