
Hero | Rajakumaran |
Music Director | S.A.Raj Kumar |
Lyricist | Aruppukottai Thavasumani |
Singers | SP. Balasubramaniam |
Year | 2013 |
திரனதிரனன திரனதிரனன
திரனன திரனன திரனன திரனன
திரனதிரனன திரனதிரனன
திரனன திரனன திரனன திரனன....
சமரிமபரி ரிநிநி நிஸரிஸ
சமரிமபரி ரிநிநி நிஸரிஸ..தமிழ் வாழ்க...
திருக்குறள் இடையழகி இடையழகி இடையழகி..
திருவாசக மொழி அழகி திருவாசக மொழி அழகி
திருக்குறள் இடையழகி திருவாசக மொழி அழகி
திருக்குறள் இடையழகி திருவாசக மொழி அழகி...
சிலப்பதிகார நடையழகி
சிலப்பதிகார நடையழகி சீவகசிந்தாமணி
விழி அழகி மொழி அழகி நடையழகி
விழி அழகி மொழி அழகி நடையழகி
திருக்குறள் இடையழகி திருவாசக மொழி அழகி
திருக்குறள் இடையழகி திருவாசக மொழி அழகி...
நேரசை நிரையசை நேர் நேர் அசை நிரைநிரையசை
நேர் நேர் நிரையசை நிரை நேர் நிரையசை நிரையசை...
நேர்நிரை நேரசை நிரைநேர் நிரையசை
நேர் நேர் நிரையசை நிரைநிரை நேரயசை...
வளையாபதியையும் வளைய வைக்கும்
வளையல் ஓசைக்காரி
குண்டலகேசியும் குழம்பி நிற்கும்
கோவில் கலசக்காரி
கோவில் கலசக்காரி கொன்றைவேந்தன் தோழி
வளையல் ஓசைக்காரி குறிஞ்சிப் பாட்டு தேனீ
நாளடி பழகும் காலடி மலர்கள்
நல்வழி தேனை நலமுடன் பொழிய
மணிமேகலையை அணிந்தவள் பார்வை
முத்தொள்ளாயிரம் வித்தைகள் பொழிய
கலித்தொகை குறுந்தொகை கன்னியின் இரு கை
கலிங்கத்து பரணியும் கொண்டாடும் இவள் அழகை
ஓஓஓஓஓஓ ஓஓஓஓஒஹ்ஹ....
திருக்குறள் இடையழகி திருவாசக மொழி அழகி
திருக்குறள் இடையழகி திருவாசக மொழி அழகி...
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ...ஓஓ
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ...ஓஓ...
தேமா புளிமா அசை சீர் தொகை வெண்பா
கலிப்பாவையின் நகை அ ஆ இ ஈ உ ஊ எ ஏ...ஓஓ....
அகநானூற்றின் உதடு கொண்டு அமுதம் செய்யும் மங்கை
புறநானூற்றின் புருவம் கொண்டு போர்கள் செய்யும் நங்கை
போர்கள் செய்யும் நங்கை மதுரை காஞ்சி மங்கை
அமுதம் செய்யும் மங்கை நெடுநெல்வாடை நங்கை
ராமாயணம் போல் நெடுங்குழல் கொண்டவள்
நளவெண்பா போல் வகிடதில் கண்டவள்
பரிபாடல் என மனதில் நின்றவள்
அபிநயம் கோடி கவி அழகியல் கண்டவள்
நற்றிணை நறுந்தொகை நங்கையின் புன்னகை
ஐந்திணை ஐம்பதும் கொண்டாடும் இவள் வரவை
திருக்குறள் இடையழகி திருவாசக மொழி அழகி
திருக்குறள் இடையழகி திருவாசக மொழி அழகி...
சிலப்பதிகார நடையழகி
சிலப்பதிகார நடையழகி சீவகசிந்தாமணி
விழி அழகி மொழி அழகி நடையழகி
விழி அழகி மொழி அழகி நடையழகி
திருக்குறள் இடையழகி
திருவாசக மொழி அழகி....அழகி...ஹ்ஹ்..

COMPILED AND UPDATED BY