
Hero | Rajakumaran |
Music Director | S.A.Raj Kumar |
Lyricist | Aruppukottai Thavasumani |
Singers | SP. Balasubramaniam,K.S.Chitra |
Year | 2013 |
தமிழ் தமிழ் நாம் வணங்கும் தமிழ்
பல தலைமுறை கண்ட தமிழ்
தமிழ் தமிழ்..தமிழ் தமிழ்..தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் நம்மை வாழ்த்தும் தமிழ்
அது வான் புகழ் கண்ட தமிழ்
தமிழ் தமிழ்..தமிழ் தமிழ்..தமிழ் தமிழ்
நம் பேச்சிலும் மூச்சிலும் இரு விழி வீச்சிலும்
ஆட்சி நடத்தும் தமிழ்
நம் பேச்சிலும் மூச்சிலும் இரு விழி வீச்சிலும்
ஆட்சி நடத்தும் தமிழ்
புவி முழுதும் முதல் மொழி ஆகி
முத்தமிழ் ஆன தமிழ்
முதல் மொழியான தமிழ்...
முதல் மொழி தமிழ் முத்தமிழ் தமிழ்
மூன்று வேந்தர்க்கும் முந்திய செந்தமிழ்
முதல் மொழி தமிழ் முத்தமிழ் தமிழ்
மூன்று வேந்தர்க்கும் முந்திய செந்தமிழ்
முதல் மொழியான தமிழ்.....
இயந்திர உலகின் எழில் மகள் போல
இளமை கொஞ்சும் தமிழ்..இளமை கொஞ்சும் தமிழ்
இனிமை புதுமை பெருமைக்கெல்லாம்
தலைமை தாங்கும் தமிழ்..தலைமை தாங்கும் தமிழ்
தலைக் காவிரி பாவையின் காதலன் நானென
இரு கை நீட்டி ஏற்கும் தமிழ்
உயர் கற்பெனும் தீயை கண்ணகி தாயை
காவியம் தீட்டிய வாய்மை தமிழ்
எங்கள் அன்புக்கு பண்புக்கும் அடிப்படை இசையென
இன்பத்தின் ஊற்றாய் விளங்கும் தமிழ்
எங்கள் அன்புக்கு பண்புக்கும் அடிப்படை இசையென
இன்பத்தின் ஊற்றாய் விளங்கும் தமிழ்
உயிர் இன்னிசை பாட்டாய் முழங்கும் தமிழ்
உயிர் இன்னிசை பாட்டாய் முழங்கும் தமிழ்
தமிழ் எங்கள் மூச்சு தமிழ் எங்கள் பேச்சு
தமிழ் தானே எங்கள் தாய்மை
எங்கள் வாய்மை எங்கள் நேர்மையடா
தமிழ் தானே எங்கள் தாய்மை எங்கள் வாய்மை
எங்கள் மேன்மை என்போம்
திருக்குறள் பாவலன் எழுத்தினில் ஆயிரம்
யுகம் வரை வாழும் தமிழ்
யுகம் பல வாழும் தமிழ்
பேரரஞரின் பணியால் தமிழ்நாடு அரசென
தனிப் பெயர் கண்ட தமிழ்
தனிப் பெயர் கண்ட தமிழ்
கலை இலக்கியம் காவியம் உயிர் பெற உலவிட
நடிகர் திலகத்தை பெற்ற தமிழ்
தமிழ் கவிஞரை போற்றிய பொன்மனச்செம்மலை
அரியணை ஏற்றிய அழகு தமிழ்
தன் மானமும் வீரமும் உயிரினும் மேலென
உதிரத்தில் ஊட்டிய அன்னைத் தமிழ்
என்றும் தாய்மையை போற்றும் பிள்ளைத் தமிழ்
இன்று செம்மொழியாகி சிறந்த தமிழ்
செம்மொழியாகி சிறந்த தமிழ்
முதல் மொழி தமிழ் முத்தமிழ் தமிழ்
மூன்று வேந்தர்க்கும் முந்திய செந்தமிழ்
முதல் மொழி தமிழ் முத்தமிழ் தமிழ்
மூன்று வேந்தர்க்கும் முந்திய செந்தமிழ்
தமிழ் எங்கள் மூச்சு தமிழ் எங்கள் பேச்சு
தமிழ் தானே எங்கள் தாய்மை
எங்கள் வாய்மை எங்கள் நேர்மையடா
தமிழ் தானே எங்கள் தாய்மை எங்கள் வாய்மை
எங்கள் மேன்மை என்போம்
தமிழ் தமிழ் நாம் வணங்கும் தமிழ்
பல தலைமுறை கண்ட தமிழ்
தமிழ் தமிழ்..தமிழ் தமிழ்..தமிழ் தமிழ்
தமிழ் தமிழ் நம்மை வாழ்த்தும் தமிழ்
அது வான் புகழ் கண்ட தமிழ்
தமிழ் தமிழ்..தமிழ் தமிழ்..தமிழ் தமிழ்
தமிழ் தமிழ்..தமிழ் தமிழ்..தமிழ் தமிழ்....

COMPILED AND UPDATED BY