Enakkoru Magan Pirappan
Annanukku Jey
Hero Arjun
Music Director Ilayaraja
Lyricist Gangai Amaran
Singers SP. Balasubramaniam
Year 1989
Song Lyrics

எனக்கொரு மகன் பிறப்பான் – அவன்
என்னைப் போலே இருப்பான்
மனக்குறை ஏதும் இன்றி பறப்பான் – இந்த
மனிதர்கள் ஞானக் கண்ணைத் திறப்பான்.( எனக்கொரு )

கல்வியில் என் பிள்ளை கலைவாணனோ
கற்பனை ஸ்வரம் பாடும் இசைராஜனோ
தில்லியில் அரசாளும் ஒரு மன்னனோ
தேனிசைக் குழல் ஊதும் சிறு கண்ணனோ

சொல்ல முடியாத செல்வச் செழிப்போடு
நல்ல வழி என்றும் வாழ்வான்
வெல்ல முடியாத வீரச்செருக்கோடு
உள்ளத் துணிவோடு ஆள்வான்

இல்லை எனும் வார்த்தை இல்லை
என்று செய்வான் என் பிள்ளை
தெள்ளத் தெளிவாக உள்ளக் கனிவாக
திசை பல திசையிலும்
இசைபட தினம் வலம்வர.......(எனக்கொரு)

நாட்டுக்கு என்னாலே தொல்லை இல்லை
நான் பெறப் போவது ஒரே ஒரு பிள்ளை
தாலாட்ட வேறாரும் தேவையில்லை
தட்டாமல் கேட்பானே தாயின் சொல்லை

இசையில் பல நாட்டை இழுத்து வசமாக்கும்
இளையராஜாவைப் போலே
திசைகள் எங்கெங்கும் வெற்றிக்கொடி நாட்டி
ஏறி வருவானே மேலே

போற்றி நான் பெற்ற செல்வம்
மாற்றுக் குறையாத தங்கம்
ஏற்று புகழ்மாலை சூட்டி புவியாவும்
ஜெயக்கொடி பறந்திட
திருமகள் அருள்துணையுடன்

எனக்கொரு மகன் பிறப்பான் – அவன்
என்னைப் போலே இருப்பான்
மனக்குறை ஏதும் இன்றி பறப்பான் – இந்த
மனிதர்கள் ஞானக் கண்ணைத் திறப்பான்...

எனக்கொரு மகன் பிறப்பான் – அவன்
என்னைப் போலே இருப்பான்
எனக்கொரு மகன் பிறப்பான்...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY