Malligai Pandha Mangaiyum
Thanga Mama
Hero Arun
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers S.Janaki
Year 1985
Song Lyrics

மல்லிகை பந்தா மங்கையும் வந்தா
மங்கையும் வந்து போதையும் தந்தா
கோலே கோல் கொன்னக்கோல்
ஆளேது என்னைப் போல்...

மல்லிகை பந்தா மங்கையும் வந்தா
மங்கையும் வந்து போதையும் தந்தா

காலாட்ட கையாட்ட கண்டாலே
எல்லாரும் வாலாட்ட
தாலாட்ட.....பாலாட்டம் தேனாட்டம்
பொண்ணுன்னு கண்ணுன்னு பாராட்ட

சீராட்ட ஆளாகி நாளாச்சு ஆத்தாடி
கூத்தாடும் காத்தாடி நான்
மாமாவே நீதானே என் ஜோடி
மைனாவும் உன் ஜோடிதான்

ஆசை வைக்க நானிருக்க
பூசை வைக்க நீயிருக்க வா மாமா...
மல்லிகை பந்தா மங்கையும் வந்தா
மங்கையும் வந்து போதையும் தந்தா..

பன்னீரை தொட்டாலும் வெந்நீரு போலாச்சு
ஏன் மாமா நீ சொல்லு....
பூ மெத்தை போட்டாலும் பொல்லாத முள்ளாச்சு
ஏன் மாமா நீ சொல்லு...

அச்சாரம் வைக்காத மச்சானை
தேடாதோ முந்தானை தான்
கண்ணாலம் கட்டாத பொன் மானை
கண்டாலும் சந்தோஷம் தான்
பூப்பறிக்க காத்திருக்க
நீயிழுக்க தேர் இருக்க வா மாமா

மல்லிகை பந்தா மங்கையும் வந்தா
மங்கையும் வந்து போதையும் தந்தா
கோலே கோல் கொன்னக்கோல்
ஆளேது என்னைப் போல்......

மல்லிகை பந்தா மங்கையும் வந்தா
மங்கையும் வந்து போதையும் தந்தா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY