Idho Mazhaithuli Idho
Thanga Mama
Hero Arun
Music Director Ilayaraja
Lyricist Vali
Singers S.Janaki,Ramesh
Year 1985
Song Lyrics

இதோ மழைத்துளி இதோ மலர்க்கொடி
வான் மேகம் வான் மேகம் நான்தானே
பருவ தாகம் தணியலாம்
விரகதாபம் கொஞ்சம் குறையலாம்...

இதோ மலர்க்கொடி இதோ மழைத்துளி....

ஆடை சூடும்....குக்குக்குக்கூ
ஆசை மேனி..... குக்குக்குக்கூ
மேலும் கீழும்.....பிப்பிப்பிப்பி
மீண்டும் மீண்டும் தேவைப்படும்

தேன் தரும் பாத்திரம் நான் தொட மாத்திரம்
ஏனிந்த ஆத்திரம் நான் தரும் நாள் வரும்
தனியறையில் அள்ளி தரும் வரையில்
உள்ளம் தவிக்குது துடிக்கிது கிளியே...

இதோ மலர்க்கொடி இதோ மழைத்துளி...

மூங்கில் மேலே..... குக்குக்குக்கூ
வாடைக் காற்று...... குக்குக்குக்கூ
மோதும் போது ஓசை வரும்
போகப் போக ஆசை வரும்

நீ தொட நான் தொட பூவுடல் தான் சுட
ஆதியும் அந்தமும் ஆடவன் கைப்பட
அதிசயமோ புது அனுபவமோ
இது முதல் முதல் அறிந்திடும் சுகமோ

இதோ மழைத்துளி இதோ மலர்க்கொடி
வான் மேகம் வான் மேகம் நீதானே
பருவ தாகம் தணியலாம்
விரகதாபம் கொஞ்சம் குறையலாம்

இதோ மலர்க்கொடி இதோ மழைத்துளி....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY