Othaiyadi Pathaiyile
Veeranadai
Hero Sathyaraj
Music Director deva
Lyricist Seeman
Singers Anuradha Sriram,Gopal Rao
Year 2000
Song Lyrics

வணக்கமுன்னா வணக்கம் இது
வாசமுள்ள வணக்கம் ஐயா
வணக்குமுன்னா வணக்கம் இது
ரொம்ப நேசமுள்ள வணக்கம்

நாங்க முல்ல மலரெடுத்து மூத்தவங்கள கும்பிட்டோம்
நாங்க மல்லிய பூவெடுத்து மாதரச கும்பிட்டோம்
சண்ட சத்தம் வேணாமுன்னு சகலரையும் கும்பிட்டோம்
சீட்டி அடிக்காதிங்க சின்னவங்களையும் கும்பிட்டோம்

நாங்க கும்பிட்டோமுங்க கும்பிட்டோம்
இந்த கூட்டத்தாரையும் கும்பிட்டோம்
அப்பிடி வணக்கமுன்னா வணக்கம் இது
வண்ணத் தமிழ் வணக்கம்

ஒத்தையிலே போறியேடி என் அத்த மவ புள்ள
செத்தருந்து பேசுவோமா இது சிவகங்கை அல்ல
ஒத்தையிலே போறியேடி என் அத்த மவ புள்ள
செத்தருந்து பேசுவோமா இது இளையான்குடி அல்ல

கெண்ட காலழகி கெறங்க வைக்கும் வேலழகி
காத்து கறுப்படிக்கும் காட்டு வழி போகாதே
என் அத்த மகளே பாப்பு நீ அடிக்காதடி டூப்பு
நான் அடுத்த மாச சம்பளத்துல வாங்கி தாரேன் சோப்பு

மச்சான் உனக்கும் எனக்கும் நேசம்
என் வயித்தில் ஆறு மாசம் உன்
அப்பன் ஆத்தா அறிஞ்சா இது அதவிடவல்ல மோசம்

வெள்ளி புடி அருவா வெடல புள்ள கை அருவா
சொல்லியடிச்ச அருவா சொழட்டுதடி
தந்தானதனதானே மச்சான் திந்தாதனதானே
தந்தானதனதானே மச்சான் திந்தாதனதானே

கடல கொல்லை ஓரத்திலே
கடல கொல்லை ஓரத்திலே அங்கே
காடப்புறா ரெண்டு நிக்க காடப்புறா ரெண்டு நிக்க
அந்த காடப்புறா கலைஞ்சதுமே
கலங்குதய்யா என் மனசு கலங்குதய்யா என் மனசு

அந்த கடல கொல்லை ஓரத்திலே
காடப்புறா ரெண்டு நிக்க அந்த காடப்புறா சேர்ந்திடுமே
கலங்கிடாதே என் மயிலே நீயும்
கலங்கிடாதே என் மயிலே

சோளக்கொல்ல ஓரத்திலே
சோளக்கொல்ல ஓரத்திலே அங்கே
சோடிப்புறா ரெண்டு நிக்க சோடிப்புறா ரெண்டு நிக்க
அந்த சோடிபுறா ஓடி போக சோர்ந்ததய்யா என் மனசு
சோர்ந்ததய்யா என் மனசு

அந்த சோளக்கொல்ல ஓரத்திலே
சோடிப்புறா ரெண்டு நிக்க
அந்த சோடிப் புறா கூடிடுமே
சோர்ந்திடாதே என் மயிலே நீயும்
சோர்ந்திடாதே என் மயிலே

வட்ட நிலவ போல என் சிணுக்கா கொட்டு கூட
வாடாமல்லி பூவழகி என் சிணுக்கா கொட்டு கூட
என் சிணுக்கா கொட்டு கூட
குளிச்சி முடிக்கையிலே என் சிணுக்கா கொட்டு கூட
குடும்பமே சரணமடி என் சிணுக்கா கொட்டு கூட
என் சிணுக்கா கொட்டு கூட

கன்னங்கருத்தவரே என் மச்சான் கொட்டுகூட
கானகத்து பூவரசே என் மச்சான் கொட்டுகூட
வீசி நடக்கையிலே என் மச்சான் கொட்டுகூட
வில்லுவண்டி தோத்துமுங்க என் மச்சான் கொட்டுகூட
என் மச்சான் கொட்டுகூட...

ஆடுலையும் அழகந்தான்டி அரும்பு மீசக்காரந்தான்டி
குறும்பா பேசினாக்க ஏ புள்ள
உன்ன கொண்டு போயிருவேன் பரமகுடிக்குதான் புள்ள

ஒத்தையிலே போறியேடி என் அத்த மவ புள்ள
செத்தருந்து பேசுவோமா இது மானாமதுர அல்ல
ஒத்தையிலே போறியேடி என் அத்த மவ புள்ள
செத்தருந்து பேசுவோமா இது மதுரஜில்லா அல்ல

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY