Usura Vechen Mama
Veeranadai
Hero Sathyaraj
Music Director deva
Lyricist Thamarai
Singers Swarnalatha
Year 2000
Song Lyrics

உசுர வச்சேன் மாமா நீ ஒதுங்கி போகலாமா
பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா
உசுர வச்சேன் மாமா நீ ஒதுங்கி போகலாமா
பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா

உசுர வச்சேன் மாமா நீ ஒதுங்கி போகலாமா
பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா
ஏய்..புளிய மரத்த பாரு புளிய மரத்த பாரு
புளியமர தோப்புக்குள்ளே பூங்காவன வீட்டப் பாரு
பூங்காவன வீட்டுக்குள்ளே மச்சானே
நம்ம புதுக்குடித்தனம் போகலாமே மச்சானே

ஏய் ஆலமரத்த பாரு ஆலமரத்த பாரு
ஆலமர தோப்புக்குள்ளே அழகான கூட்டப் பாரு
அழகான கூட்டுக்குள்ளே மச்சானே
நாம ஆடிப்பாடி இருக்கலாமே மச்சானே

நான் காதுக்கு தோடு கேட்டு கடுகடுன்னு பேசினேனா
மூக்குக்கு கல்லு கேட்டு மொகஞ்சுளிச்சு நின்னேனா
கழுத்துக்கு நகை கேட்டு கண்டபடிதான் பேசினேனா
காலுக்கு கொலுசு கேட்டு கோபப்பட்டுத்தான் நின்னேனா
ஆச வச்ச நேச மச்சான் அன்பத்தானே கேட்டேன்
ஒரு மஞ்சத்தாலி கேட்டேன்

தென்ன மரத்த பாரு தென்ன மரத்தப் பாரு
தென்னமரத் தோப்புக்குள்ளே தென்றல் வந்து வீசும் பாரு
தென்றலோட சேர்ந்து நாம மச்சானே
ஒரு தெம்மாங்குதான் பாடலாமே மச்சானே

ஹே..கொய்யா மரத்த பாரு கொய்யா மரத்த பாரு
கொய்யாமரத் தோப்புக்குள்ளே கொஞ்சி பேசும் குயிலப்பாரு
கொஞ்சிப் பேசும் குயிலப் போல மச்சானே
நாம கூடிப் பேசி இருக்கலாமே மச்சானே

உசுர வச்சேன் மாமா நீ ஒதுங்கி போகலாமா
பாசம் வச்சேன் மாமா நீங்க பயந்து ஓடலாமா.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY