Nikkattuma Nadakkattuma
James Pandu
Hero Parthiban & Prabhu Deva
Music Director S.A.Raj Kumar
Lyricist Kalidasan
Singers Mano,Anuradha Sriram
Year 2000
Song Lyrics

நிக்கட்டுமா நடக்கட்டுமா
பறக்கட்டுமா சொல்லம்மா
எடுக்கட்டுமா கொடுக்கட்டுமா
அணைக்கட்டுமா சொல்லம்மா

திருடா திருடா அவரசம் ஏண்டா
பொறுடா பொறுடா புதையல் தரேன்டா
வண்ண நிலவை ஜன்னலுக்குள்ளே
மூடி வைக்க வேணாம்

பட்டு மலரை தொட்டுப் பறிக்க
பட்டிமன்றம் வேணாம்
நிக்கட்டுமா நடக்கட்டுமா
பறக்கட்டுமா சொல்லம்மா...

கண்ணு ரெண்டும் கப்பல் படை
நீ நடந்தா சிப்பாய் படை
கண்ணசைச்சா கண்ணசைச்சா
நெஞ்சுக்குள்ளே அமைதிப்படை

மேகங்கள் திரண்டு வந்தா
என்ன செய்யும் சின்ன குடை
சேலையை தீண்ட வந்தால்
தொட்டு விட ஏது தடை

பூக்களுக்கு வயசு வந்தா
என்ன நடக்கும் என்ன நடக்கும்
மீசை வச்ச வண்டு வந்து
கொடை பிடிக்கும் கொடை பிடிக்கும்

ஆறடியில் குயிலொன்னு தரையிலே நடக்குதே
அம்மம்மா புயலொன்னு கரையத்தான் கடக்குதே
தாங்காது தாங்காது தாங்கதம்மா
நிக்கட்டுமா நடக்கட்டுமா...ஓடுபா
பறக்கட்டுமா சொல்லம்மா

நீச்சல் குளம் போல கண்களையும் தந்தானோ
நீந்தியே குளிப்பதற்கு என்னையும் தந்தானோ
காற்றை கடப்பதற்கு கால்கள் தந்தானோ
நண்டு போல் நடனமிடும் நாயகனும் நீதானோ

நான் விரும்பும் திருக்குறளே
உன் குரல்தான் உன் குரல்தான்
நான் விரும்பும் தலை நகரம்
உன் தெருதான் உன் தெருதான்

பந்தயக் குதிரையா இருக்குறே இருக்குறே
ரெக்கைகள் இல்லாம பறக்குறே பறக்குறே
விளையாட்டு நீதானே நடத்துறியே...

நிக்கட்டுமா நடக்கட்டுமா
பறக்கட்டுமா சொல்லம்மா
எடுக்கட்டுமா கொடுக்கட்டுமா
அணைக்கட்டுமா சொல்லம்மா

திருடா திருடா அவரசம் ஏண்டா
பொறுடா பொறுடா புதையல் தரேன்டா
வண்ண நிலவை ஜன்னலுக்குள்ளே
மூடி வைக்க வேணாம்

பட்டு மலரை தொட்டுப் பறிக்க
பட்டிமன்றம் வேணாம்
நிக்கட்டுமா நடக்கட்டுமா
பறக்கட்டுமா சொல்லம்மா...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY