Hello Mister Naidu
Vallarasu
Hero Vijayakanth
Music Director deva
Lyricist Vairamuthu
Singers Mano,Anuradha Sriram
Year 2000
Song Lyrics

ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு
அள்ளியெடு கொள்ளையிடு
சொல்லிக் கொடு நாயுடு
அச்சம் விடு உச்சம் தொடு
கொடி நடு நாயுடு....

பாலாற்றில் போராடு ஆழத்தில் நீராடு
பூ முத்தம் ஒவ்வொன்றுக்கும் பொன்னை போடு
வேறென்ன ஏற்பாடு ஆனந்த கூத்தாடு
நெஞ்சோடு தலையணை தேடு
நிம்மதியோடு நிம்மதியா
ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹௌ டு யூ டு

உன்னை வளைத்து பிடிக்கத்தான்
மனதில் ஒரு வேகம் ஓஓஒஹ்
உன்னை அணைக்கும் அணைப்பிலே
நொறுங்கி விடும் தேகம்

வேடம் போட்டு வந்த வேடன் நானடி
விரித்த வலையிலே காடே விழுமடி
ரா ரா ரா ரா ரா ரா....

தெலுங்கு தேசத்து மொளகா போலே
ஒதட்டு முத்தம் ஒரைக்குது உள்ளே
கோதாவரி கரை வாழையை போலே
சாயவா நெஞ்சிலே..ஹஹா..

ஹோய்....செப்பு சிலைக்குள் என்னென்ன உண்டு
துப்பு துலக்க வந்தவன் நானே
நினைத்த காரியமே வெற்றி வெற்றி பெண்ணே
ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ ஹௌ டு யூ டு....

படம் அழகு என்பதா பாம்பு மழை வெல்லவே
நிழல் கறுப்பு என்பதா இருட்டும் மீள வெல்லவே
பாம்பை அறியத்தான் வல்லூறு வந்திருக்கு
இருட்டை விரட்டத்தான் தீக்குச்சு வந்திருக்கு

தீபம் அணைக்க தீக்குச்சி எதுக்கு
இருட்டில் படிக்க ஏடுகள் இருக்கு
உதடு போடும் கையெழுத்துக்காக
ஒடம்புதான் துடிக்குது

காற்றை துளைத்து ரகசியம் எல்லாம்
கண்டு பிடிக்கும் காலம் வந்தாச்சு
இன்னும் கொஞ்சம் தூரம்தான்
வெற்றி வெற்றி வெற்றி பெண்ணே

ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு
ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு

உந்தன் முகம் அது ஏது சொல்லி விடு நாயுடு
கன்னி பெண்ணின் கன்னம் குத்தும் தாடி எடு நாயுடு
இருளுக்கு பின் பக்கம் அறியாமல் போவேனோ
இரு கண்ணில் சூரியன் உண்டு நான் வீழ்வேனா

தென்மதுரைக்காரன் நான் ஜெயிக்காமல் போவேனோ
புலி வேட்டைக்காரன் கிளியை சிந்திப்பானா சிந்திப்பானா
ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு...ஹஹாஹ்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY