Ovvoru Paadalilum (happy)
Ennavale
Hero Madhavan
Music Director S.A.Raj Kumar
Lyricist Vairamuthu
Singers Unni Krishnan
Year 2000
Song Lyrics

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே...இசை நெஞ்சே
பள்ளி நாள் நினைவுகளை பழைய நாள் உறவுகளை
பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே... இசை நெஞ்சே...

ஓஹோ...ஹோ...அப்போது சிந்திய மழையில்
இப்போது நனைந்திட வைக்கும்
அப்போது சிதறிய கனவை
இப்போது கைகளில் சேர்க்கும்
கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டு வரும்

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே......

ஆணுக்கும் பெண்ணுக்கும் நெஞ்சுக்குள்ளே
கானம் உண்டு இசை ஞானம் உண்டு
மேடையில் பாடல்கள் பாடிச் செல்ல
ஆசை உண்டு கொஞ்சம் நாணம் உண்டு

ஸ்ருதி சேரும் முன்னமே சுரம் பாடு அன்னமே
குயிலின் காட்டில் குருவிகள் பாடாதா
ஓடுகின்ற நீரிலே பாசிகள் சேராது
பாடுகின்ற நெஞ்சிலே துன்பம் வாராது ஓஹோஹோ...

கானங்கள் பாடும் போதில் காற்றோடு ஈரம் கூடும்
ராகங்கள் மேகம் சேர்த்து மழையும் கொண்டு வரும்
ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே...இசை நெஞ்சே..

ஒவ்வொரு நெஞ்சத்தின் ஆழத்திலும்
சோகம் உண்டு கண்ணீர் ஈரமுண்டு
அந்தந்த சோகத்தை ஆற்றி வைக்க
பாடல் உண்டு பொங்கும் ராகம் உண்டு

பொன்னான உள்ளமே பண்பாட ஆறுமே
தாய் மடி போலே ஆறுதல் தந்திடுமே
வேர்வை பூக்கும் வாழ்க்கையில் தென்றல் பாடல்தான்
ஈரம் தீரும் வாழ்க்கையில் சாரல் பாடல்தான்..ஓஓஹோ

தாயில்லை என்றால் கூட தாலாட்டு பாட்டில் உண்டு
கானங்கள் இல்லா ஊரில் காற்றாக பாடல் உண்டு

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
நினைவிலே சுகமிருக்கு நெஞ்சே...இசை நெஞ்சே
பள்ளி நாள் நினைவுகளை பழைய நாள் உறவுகளை
பாடல்கள் ஏந்தி வரும் நெஞ்சே... இசை நெஞ்சே...

ஓஹோ...ஹோ...அப்போது சிந்திய மழையில்
இப்போது நனைந்திட வைக்கும்
அப்போது சிதறிய கனவை
இப்போது கைகளில் சேர்க்கும்
கண்ணீரும் தேனும் சேர்த்து பாடல் கொண்டு வரும்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY