Ulagathil Ulla Adhisayam (solo)
Thai Poranthachu
Hero Prabhu & M.Karthik
Music Director deva
Lyricist Pa vijay
Singers Sujatha
Year 2000
Song Lyrics

உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து
உன்னையும் சேர்த்து

சங்கத்தமிழ் நான்கு உன்னை
உன்னை சேர்த்து
என்னுடன் நீதான் சேர்ந்தபோது
ரெண்டல்ல நாம் ஒன்று..ஓஓஒ....( உலகத்தில் )

குறுகுறு பார்வையிலே நீ
குறும்பாய் பார்ப்பாய் அதை ரசித்தேன்
உந்தன் பெயர் அருகில் என் பெயரை
எழுதி தினம் ரசித்தேன்

எங்கோ நான் பார்த்தால் நீ
என்னை பார்க்கிறாய் அதை ரசித்தேன்
என்னை பிரிகையிலே உன் கண்கள்
கலங்குமே அதை ரசித்தேன்

என் கண்ணில் ஒரு சின்னதாய்
தூசு பட்டதும் அச்சச்சோ என்று சொல்வாய்
அந்த துடிப்பினை நான் ரசித்தேன்
ஓஓஓஓ.....ஓஓஓஒ.....ஓஓஓஒ....( உலகத்தில் )

உந்தன் கால் சுவடை என்
கால்கள் தொடவும் அது சுகமே
உன்னை பார்த்துக் கொண்டே
என் ஆயுள் கழிந்தால் அது சுகமே

உந்தன் மூச்சைத்தான் என் மூச்சில்
ஏற்றுவேன் அது சுகமே
உன்னை பார்ப்பதற்கு நான்
தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே

உன் வீட்டு மேகம் என் வீட்டை கடந்தால்
என்னுள்ளே ஒரு சுகமே
அது எப்போதும் தனி சுகமே..

உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து
உன்னையும் சேர்த்து

சங்கத்தமிழ் நான்கு உன்னை
உன்னை சேர்த்து
என்னுடன் நீதான் சேர்ந்தபோது
ரெண்டல்ல நாம் ஒன்று...அஆஹாஹ்..
லலலலலா......லாலலல்ல்ல்லா.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY