Ulagathil Ulla Adhisayam
Thai Poranthachu
Hero Prabhu & M.Karthik
Music Director deva
Lyricist Pa vijay
Singers Sujatha,Unni Krishnan
Year 2000
Song Lyrics

உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து
உன்னையும் சேர்த்து

சங்கத்தமிழ் நான்கு உன்னை
உன்னை சேர்த்து
என்னுடன் நீதான் சேர்ந்தபோது
ரெண்டல்ல நாம் ஒன்று...( உலகத்தில் )

நடக்கையில் உன் புடவை செய்யும்
சருகு ஓசை அதை ரசித்தேன்
சிரிக்கையில் உன் முகத்தில் ஒரு
குழந்தை தவழும் அதை ரசித்தேன்

என்னை பிரிகையிலே உன்
கண்கள் கலங்குமே அதை ரசித்தேன்
நீ என் நிழலையுமே தொட்டு பார்க்கும்
பொழுதிலே அதை ரசித்தேன்

மலை உச்சி ஏறித்தான்
உன் பெயரை சொல்லித்தான்
மனதுக்குள் நான் ரசித்தேன்
அதன் எதிரொலி கேட்டு ரசித்தேன்

உன்னை பார்ப்பதற்கு நான்
தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே
உன்னை பார்த்துக் கொண்டே என்
ஆயுள் கழிந்தால் அது சுகமே

உனக்காக காத்திருந்து என்
கால்கள் வலிக்கையிலொரு சுகமே
என் பேர் நீ சொன்னால் எட்டு லட்சம்
நரம்பிலும் புது சுகமே

உன் வீட்டு மேகம்தான்
என் வீட்டை கடந்தால்
என்னுள்ளே ஒரு சுகமே
அது எப்போதும் தனி சுகமே..ஓஓஹ்

உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து
உன்னையும் சேர்த்து

சங்கத்தமிழ் நான்கு உன்னை
உன்னை சேர்த்து
என்னுடன் நீதான் சேர்ந்தபோது
ரெண்டல்ல நாம் ஒன்று......
லாலலலாலா......லாலலலல்ல்ல்லா...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY