Varthai Illamal
Sudhandhiram
Hero Arjun
Music Director S.A.Raj Kumar
Lyricist Kalaikumar
Singers Hariharan,Sujatha
Year 2000
Song Lyrics

வார்த்தை இல்லாமல் பேசுது நெஞ்சு
காதல் இல்லாமல் வாடுது இங்கு
ஒரு சொல்லாலே கிளியே கொல்லாதே கிளியே
ஒரு சொல்லாலே கிளியே
என்னை கொல்லாதே கிளியே

அடி காயுமா என் விழி மாறுமா தலைவிதி
மழையாய் வருவாயா குடையாய் வருவாயா
நீ மழையாய் வருவாயா இல்லை
குடையாய் வருவாயா

அடி உண்மைகளை சொன்னதுக்கு
நீ கொடுத்த தண்டனைகள்
ரொம்ப ரொம்ப அதிகமடி

என் நெஞ்சுக்குள்ளே சொந்தமுண்டு
கண்ணுக்குள்ளே கோபம் உண்டு
இரண்டிலும் எனக்கு வலி

அடி ஒரு நாளில் என் நெஞ்சத்தை உள்ளிருந்து பாரடி
இப்போது நான் இங்கே துன்பத்துக்கு காதலி
இந்த வாழ்க்கையே பாரமா காதலே சாபமா

கண்ணில் இருப்பவளே கண்ணீர் சுடவில்லையா
என் நெஞ்சில் வசிப்பவளே நெஞ்சம் புரியலையா
வார்த்தை இல்லாமல் பேசுது நெஞ்சு
காதல் இல்லாமல் வாடுது இங்கு

தண்ணிக்குள்ளே தீப்பிடிச்சா தீயணைக்க
என்ன வழி எனக்கது புரியலையே
பூ எது முள்ளு எது பூ முடியும்
பெண்களுக்கே புரிஞ்சிக்க முடியலையே

நான் இங்கேயா அங்கேயா
எந்த பக்கம் சேருவேன்
என்னோடு நான் இல்லை
எங்கே என்னை தேடுவேன்

இந்த உறவுகள் இணையுமா
தனி வழி பிரியுமா
பூக்கள் குடுத்தவனே காயம் குடுத்தானே
அட காதல் குடுத்தவனே இன்று கண்ணீர் குடுத்தானே

வார்த்தை இல்லாமல் பேசுது நெஞ்சு
காதல் இல்லாமல் வாடுது இங்கு
ஒரு சொல்லாலே கிளியே கொல்லாதே கிளியே
ஒரு சொல்லாலே கிளியே
என்னை கொல்லாதே கிளியே

அடி காயுமா என் விழி மாறுமா தலைவிதி
மழையாய் வருவாயா குடையாய் வருவாயா
நீ மழையாய் வருவாயா இல்லை
குடையாய் வருவாயா.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY