Mazhai Mazhai Irandu
Sudhandhiram
Hero Arjun
Music Director S.A.Raj Kumar
Lyricist Kalaikumar
Singers Hariharan,Sujatha
Year 2000
Song Lyrics

மழை மழை இரண்டு மனசுக்குள் மழை
ஒரே முறை நனைந்து விடுவது முறை

உயிரில் உந்தன் பிம்பங்களா
எனக்குள் கோடி இன்பங்களா
பார்வையாலே என் மனதை
சூறையாடும் பெண் புயலா

மழை மழை இரண்டு மனசுக்குள் மழை
ஒரே முறை நனைந்து விடுவது முறை....

தங்கத் தூண் ரெண்டு காலானது
தொங்கும் தோட்டத்தை இடை தாங்குது
உயிரை உலுக்கும் அழகு
என்னை படிக்க பழகு

ஆஹாஹ் ஈட்டி முனை ஒன்று கண் ஆனது
தீட்டும் எண்ணத்தில் எனை தீண்டுது
மலரின் படுக்கை விரித்து
ஆஹ்...இனிக்கும் இரவை நிறுத்து

கண்ணில் தானே இருவரும் இரு இமை
தொடலாம் நாமே ஒரு நொடிக்கொரு முறை
எந்நாளும் சுகமல்லவா
உன்னை என்னோடு நான் தைக்கவா

மழை மழை இரண்டு மனசுக்குள் மழை
ஒரே முறை நனைந்து விடுவது முறை....

மழையில் நிலவொன்று நீராடுது
முடிவில் உடை கேட்டு போராடுது
உலவு பார்க்கும் எனையே
சலவை செய்து உடுத்துது

ஆஹ்..கைகள் உன் கைகள் எனை மீட்டுது
காதல் ராகங்கள் தினம் கேக்குது
இறுக்கி பிடித்து அணைத்து
ஆஹ்ஹ..இதய துடிப்பை நிறுத்து

பேசும் வீணை நரம்பென்னும் சிறு இடை
தாளம் போடும் நடனங்கள் உன் நடை
என்னை வெல்ல அழகே படை
என்னை நீ ஆள இல்லை தடை

மழை மழை இரண்டு மனசுக்குள் மழை
ஒரே முறை நனைந்து விடுவது முறை

உயிரில் உந்தன் பிம்பங்களா
எனக்குள் கோடி இன்பங்களா
பார்வையாலே என் மனதை
சூறையாடும் பெண் புயலா

மழை மழை இரண்டு மனசுக்குள் மழை
ஒரே முறை நனைந்து விடுவது முறை....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY