Ennennamo Maatram
Sudhandhiram
Hero Arjun
Music Director S.A.Raj Kumar
Lyricist Kalaikumar
Singers Hariharan,Sujatha
Year 2000
Song Lyrics

என்னென்னமோ மாற்றம் எனக்குள்
என்ன மந்திரமோ செய்கிறான்
வண்ணத்து பூச்சிகளின் சிறகை
என் ஆடை எங்கும் கோர்க்கிறான்
ஒஹ்..இன்று தான் காதல் பிறந்ததே
நூறாண்டுகள் அதுக்குள் கடந்ததே....

ஒரு மின்னல் ஒரு மின்னல்
என் கண்ணை கிள்ளியதே
என் பின்னால் என் பின்னால்
ஒளி வட்டம் தோன்றியதே

ஓர் பார்வைதான் வீசினாள் அவள்
ஓர் வார்த்தைதான் பேசினாள்
என் ஆயுளை இரண்டால் பெருக்கினாள்

என்னென்னமோ மாற்றம் எனக்குள்
என்ன மந்திரமோ செய்கிறான்....

காதலின் சோதனை எனக்கு
இது வரை பழக்கம் இல்லை
பெண்மையின் வாசனை எனது
இதயத்தை பறித்ததில்லை

அட நான் கூட உன் போன்ற ஆள்தானடா
கொஞ்சம் உள்ளூர பயம் உள்ளது
இங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஓர் ஆசைதான்
இதை தப்பென்று யார் சொன்னது

உன் உயிரில் என் உயிரை ஒற்றி பார்ப்போமா
உன் கூந்தல் இருள் காட்டில்
விளக்கேற்றி பார்ப்போமா

எனக்கில்லை ஆட்சேபணை
எதற்கிந்த ஆலோசனை
வா தொடங்கலாம் பெண்ணுக்கே முதலிடம்

என்னென்னமோ மாற்றம் எனக்குள்
என்ன மந்திரமோ செய்கிறான்....

காலையில் விழித்ததும்
வெளிச்சம் போல் வந்து நீ அணைத்தாய்
குளித்திடும் பொழுதினில் தழுவும்
துளிகளில் நீ தெரிந்தாய்

அடி முன்னூறு மைல் வேகம் பைக் சீறுதே
என் பின்னாடி நீ அமர்ந்தால்
உன் கண்ணாடி வளையல்கள் கை தட்டுதே
அடி என்னோடு நீ இருந்தால்

உன் மீசை முள்ளாலே என் கன்னம் குத்தி பார்
பேரின்பம் பெண் தேசம் அதை சுத்தி சுத்தி பார்
இடைதான் என் மைல் கல்லடி
அங்கங்கே வழி சொல்லடி
வா காதலா என்னை நீ மாற்றி தா

என்னென்னமோ மாற்றம் எனக்குள்
என்ன மந்திரமோ செய்கிறாள்
வண்ணத்து பூச்சிகளின் சிறகை
என் ஆடை எங்கும் கோர்க்கிறான்
ம்ம்ம் லாலாலலா ம்ம்ம்..லாலாலா......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY