Un Aathalukkum Thanks
Selvakku
Hero Chandrasekar
Music Director Chandrabose
Lyricist S.Karunanidhi
Singers Malasiya Vasudevan
Year 1986
Song Lyrics

உன் ஆத்தாளுக்கும் தேங்க்ஸ்
உங்கப்பனுக்கும் தேங்க்ஸ்
பொண்ணு ரொம்ப எளசு
பொங்குதடி மனசு

உனக்கு மேனி தங்கம் நான்
உரசிக்கிறேன் கொஞ்சம்
ஒதட்ட இங்கே காட்டு அதில்
இனிப்பிருக்கா பாப்போம்
அதில் இனிப்பிருக்கா பாப்போம்.. (ஆத்தாளுக்கும்)

ராத்திரி நேரத்துல ரகசியம் பேசுவேன்
ராசாத்தி கூந்தலுக்கு மல்லியப்பூ சூடுவேன்
ஆபுரம் காதுக்குள்ளே ஆராரோ பாடுவேன்
அடியே வரவா சுகமே தரவா... ( ஆத்தாளுக்கும்)

நெத்தியில குங்குமமா என்னையே வச்சுக்கடி
நெஞ்சில சந்தனமா அள்ளியே பூசிக்கடி
கொத்தாக எடுத்து என்ன
கொண்டையிலே சொருகிக்கோடி
மெத்தைக்கு நாள் குறிச்சி மச்சான ஏத்துக்கடி
அடியே வரவா சுகமே தரவா... ( ஆத்தாளுக்கும்)

செவ்வாழ தோட்டத்துல தேனாறு பாயாதோ
தெம்மாங்கு பாட்டு ஒண்ணு தானாக கேட்காதோ
அடியே வரவா சுகமே தரவா... ( ஆத்தாளுக்கும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY