Naan Ippo Oorai Sutrum
Doubles
Hero Prabudeva
Music Director Srikanth Deva
Lyricist Vairamuthu
Singers Hariharan
Year 2000
Song Lyrics

நான் இப்போ ஊரை சுற்றும் காற்று
ஒரு சைக்கிள் டியூப்பில்
நானாக மாட்டி கொள்ள மாட்டேன்
கல்யாணம் பண்ணி கொள்ள மாட்டேன்
என் தோளின் மேலே கல்லை நான்
கட்டிக் கொள்ள மாட்டேன்

கல்யாணமே பொய் என்பது
பொய் வாழ்வின் பொய்யடா
கல்யாணத்தால் உன் வாழ்க்கையை
முழுமை செய்யடா…. ( நான் இப்போ )

பூக்கள் வேண்டும் என்பதால் நீ
காட்டை வாங்க வேண்டுமா...
சிற்றின்பம் கருதி ஜென்மம் தொலைவதா சொல்

கல்யாணம் கட்டி கொள்வது
சிற்றின்பம் மட்டும் இல்லையே
பேரின்பம் காட்டும் பிள்ளை உண்டடா நில்

பிரம்மச்சாரி சுதந்திரவாதி
சம்சாரத்தில் ஆயுள்கைதி
நான் என்ன சின்ன பையனா
பெண் சேலையை.....
தொவைக்கின்ற வாஷிங்மெஷினா

கல்யாணமே இல்லாதவன்
தனிமையில் தேய்கிறான்
பொன் சேர்த்ததும் பெண் பார்ப்பவன்
வாழ்க்கையில் ஜெய்கிறான்

பிரம்மச்சாரி வாழ்க்கையில்
அட நித்தம் நித்தம் சண்டே தான்
ஒரு தாலி தந்தால் நித்தம் சண்டை தானே

நாவை சுடுமே என்பதால்
நீ பத்தியம் கொள்வது வம்புதான்
அட சண்டை கூட அன்பின் அம்சம் தானே

பெண்கள் மேலே நம்பிக்கை உண்டு
கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை
உணர்ச்சிக்கு உடன்படடா
கல்யாணம் அறிவுக்கு முரண்பாடடா

நான் இப்போ ஊரை சுற்றும் காற்று
ஒரு சைக்கிள் டியூப்பில்
நானாக மாட்டி கொள்ள மாட்டேன்
கல்யாணம் பண்ணி கொள்ள மாட்டேன்
என் தோளின் மேலே கல்லை நான்
கட்டிக் கொள்ள மாட்டேன்

தொல்லையை நீ தள்ளாட
நீ திருமணம் கொள்ளடா
நீ யார் என்று ஊர் நம்பவே
பெண்மையை வெல்லடா....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY