Colourful Nilavu Digital
Doubles
Hero Prabudeva
Music Director Srikanth Deva
Lyricist Vairamuthu
Singers Timmy,Vasundara Dass
Year 2000
Song Lyrics

கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு
உனக்குள் தெரிகின்றதோ
உள்ளொன்று இருக்க இன்னொன்றை தேடி
உள்ளங்கை அரிக்கின்றதோ

என்னோடு நீ கண் வீசினால்
உன்னோடு நான் கல் வீசுவேன்
நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா நாம்
நோக்கி என்ன பயன்.....

தோள் கிண்ணம் போல் நாயகி இருக்கையில்
தேன்கிண்ணம் தேடி எதுக்கு அலைகிறாய்
ரெண்டு குதிரையில் பயணங்கள்
சரிபடுமா......சொல்லையா

தோள் கிண்ணம் மாடல் பூஜைக்கு புரியாது
எவர் சில்வர் தானே வசதிக்கு வருவது
ரெட்டை குதிரைகள் பூட்டிய தேர்
இல்லையா....இல்லையா.......
ரெட்டை குதிரைகள் முட்டி கொண்டால்
தேர் சென்று ஊர் சேர்ந்திடுமா..ஹா ஹா ( கலர்புல்)

கல்யாணம் கொள்ளும் வரை
காதலை காதலி கல்யாணம் கொண்ட பின்பும்
மனைவியை காதலி சாதிக்க பிறந்தவன்
ஒருவனுக்கு ஒருத்தி யப்பா இல்லையா

சாதிக்க பிறந்தவன் மனைவியும் அமைவதுண்டு
சாதித்து முடித்ததும் துணைவியும் வைப்பதுண்டு
மனைவிகள் சங்கம் வைத்து தசரதன்
ஆளவில்லையா.......இல்லையா
ராமன் போல் அவன் வாழ்ந்திருந்தால்
ராமாயணம் சோகம் இல்லையடா ஹா ஆஆ ( கலர்புல்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY