Pendattikkum Purushanukkum
Doubles
Hero Prabudeva
Music Director Srikanth Deva
Lyricist Vairamuthu
Singers Sujatha,Devan E.Ekambaram
Year 2000
Song Lyrics

ஏய் பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும்
அன்டர்ஸ்டான்டிங் வேணும் நீ
சந்தேகத்த விட்டுபுட்டா சந்தோசம்தான் கூடும்
உரிமை இருக்கு எனக்கு ஒளிவு மறைவு எதுக்கு

ஏய் பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும்
அன்டர்ஸ்டான்டிங் வேணும் நான்
சந்தேகத்த விட்டுபுட்டேன் தானா வந்தது ஞானம்
எல்லாம் இருக்கு உனக்கு எடுத்தா புடிக்கும் எனக்கு

யம்மா யம்மா யம்மா யம்மா ஏய் யம்மா
யம்மா ஏய் யம்மா யம்மா

பொண்டாட்டி உன் பொறுப்பு என்ன
உன் இடுப்பு மடிப்பில் விழுந்த என்னை
எழுந்து போக செய்யாதே

கண்ணாளா உன் பொறுப்பு என்ன
என் கட்டிலறைக்கும் சமையலறைக்கும்
கொறைகள் எதுவும் வைக்காதே

எல்லா நாளும் ஒன்று போல
இருப்பதில்லையே சுந்தரி
ஏறத்தாழ இருக்கும் போது
என்னை கொஞ்சம் ஆதரி
அணைப்பதிலே அன்பிருந்தா போதுமையா

யம்மா யம்மா யம்மா யம்மா அம்மா
அம்மா அம்மா அம்மா.......

உன் பிள்ளை அட நான் தானே
ஒரு பிள்ளை கொடுக்க எனக்கு
வாய்த்த பிள்ளையாரு நீதானே

உன் பிள்ளை நான் ஆனால்
ஒரு பிள்ளை செய்யும் தொண்டு
யாவும் செய்ய வேண்டும் தடுக்காதே

போக போக கணவன் மனைவி
பேச்சு வார்த்தை குறையணும்
மனசுகள் புரிஞ்சி நடக்கும்
காலம் வந்து சேரணும்

வானவில்லை போல்
கூட வரணும் மறைஞ்சிடனும்
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா...ஹோய் (பொண்டாட்டிக்கும் )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY