Adi Kadhal Oru Kannil
Doubles
Hero Prabudeva
Music Director Srikanth Deva
Lyricist Vairamuthu
Singers Harini,Unni Krishnan
Year 2000
Song Lyrics

அடி காதல் ஒரு கண்ணில்
காமம் ஒரு கண்ணில் இதுதான் தேன் நிலா
சிறு முத்தம் தருகையில்
மொத்தம் நனைவது அடடா தேன் நிலா

நான் காலம் முழுதும் தூங்கும்
தலையணை உந்தன் நெஞ்சிலா
உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும்
மாலை தென்றலா
கலந்திடவா.....கரைந்திடவா

விரல்களை நுழைத்து கூந்தலை கலைத்து
இதழ்களை அடைத்து இதயத்தை நிறுத்து
தேகத்தை கொடுத்து தீபத்தை நிறுத்து
வாரியே கொடுப்பேன் வசதியை பொறுத்து

பற பற பறவென மோக வெள்ளம் பாய்வது எதற்கு
அடடடா ஆணி வேரும் இனிக்குது எனக்கு
என் மேனியில் மயில் இறகாக உன் மீசை ஆடியதென்ன
உன் ஆடைகள் நழுவிய போது ஆடை நானே
விடை சொல்லடி ஆஹா பதில் என்னடி

இது நல்ல உணர்ச்சி இளமைக்கு பயிற்சி
உடம்புக்குள் உயிரை தேடிடும் முயற்சி
நான் இன்று கண்டேன் இன்னொரு மலர்ச்சி
நாளைக்கும் வேண்டும் சுகங்களின் தொடர்ச்சி

உன் தேவைகள் எவை என்று சொன்னால்
தீர்த்து வைப்பேன் அது என் கடமை
பெண் தேவைகள் எவை என்று காண
ஆணின் கடமை கண்டுபிடி கண்டுபிடி.. ( அடி காதல் )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY