Manavarellam Indru Pookkalai
Ilayapiravigal
Hero Rajeev
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Malasiya Vasudevan,S.P.Shailaja
Year 1983
Song Lyrics

மாணவரெல்லாம் இன்று பூக்களைப்போலே
பூக்களும் நாளை காய்க்கும் பூமியின் மேலே
கலைக் கல்லூரி வாழ்க்கை இளமையின் காவியம்
தினம் ஒன்றாக கூடும் இதயமோ ஆயிரம்
பலவித அனுபவம் பல முகம் அறிமுகம் ( மாணவ )

கூட்டத்திலே சின்னக்குட்டி மாட்டிக்கிட்டாளாம்
கூட வந்த சின்னப் பையன் இடிச்சு பார்த்தானாம்
மாட்டிக்கிட்ட சின்னக்குட்டி முறைச்சு பார்த்தாளாம்
இடிச்சு நின்ன சின்னப் பையன் வழிஞ்சு நின்னானாம்

பொன் வண்டுகள் பூச்செண்டுகள்
எல்லோரும் கும்மாளமாம்
தோளோடு தோள் தொற்றிக் கொண்டு
செல்கின்ற ஊர்கோலமாம்

கண்ணோடு கண் பேசுமிடம்
கையோடு கை மோதும் இடம்
குறும்பும் குசும்பும் நடக்குது இங்கே
கரும்பும் எறும்பும் நெருங்குது இங்கே ( மாணவ )

பெண் வர்க்கம் ஆண் வர்க்கம்
பேதங்கள் இல்லாதது
என் மட்டிலும் எப்போதுமே
வெட்கங்கள் சொல்லாதது

எண்ணங்களின் வண்ணப்படி
வட்டமிடும் வஞ்சிக்கொடி
அடியே நீதான் சுதந்திர பறவை
உடையும் நடையும் உலுக்குது மனதை ( மாணவ )

கல்லூரியின் பட்டங்களை
பிள்ளைகள் எட்டும்படி
எல்லோரையும் மேலேற்றிடும்
வாத்யார்கள் ஏணிப்படி

காலங்களோ பொன் போன்றது
கடமைகளோ கண் போன்றது
படிப்பும் உழைப்பும் பயன் தரும்போது
அதனால் உயரும் தாய்த்திருநாடு... ( மாணவ )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY