Paaduven Kelungal Thozhargale
Ilayapiravigal
Hero Rajeev
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Krishnamurthy,Sankar (Ganesh),Asharani,Sankar
Year 1983
Song Lyrics

பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே
ஒவ்வொரு வாத்தியார் எந்த மாதிரி
மிமிக்கிரி பண்ணுவேன் அந்த மாதிரி ( பாடுவேன் )

நம்ம இங்கிலீஷ் வாத்தியார் பேரு கணபதி ராவ்தான்
நட இப்படித்தான் இருக்கும் அவர்......
பானையின் உடலிருக்கும் பூனையின் குரலிருக்கும்
பாடியும் வளைஞ்சிருக்கும் தாடியும் வளர்ந்திருக்கும்
அப்பாவி ஆனாலும் சிடுமூஞ்சி.... ( பாடுவேன் )

நாம தமிழ் படிக்கும் வாத்தியார் பேரு தாத்தாசாரிதான்
அவர் தமிழில் போதையுண்டு ஊரு பாண்டிச்சேரிதான்
காலரில்லா சட்டை கையில் பொடிமட்ட
நெத்தியிலே பட்ட நடுத்தலையில் சொட்ட

சொட்ட தல பளபளன்னு கண்ணாடி போலிருக்கும்
பொட்டப்புள்ள தலச்சீவி பொட்டு வச்சு பூமுடிக்கும்
இப்போதும் எப்போதும் அழுமூஞ்சி
இப்போதும் எப்போதும் அழுமூஞ்சி.... ( பாடுவேன் )

நம்ம கணக்கு வாத்தியார் பேரு அடைக்கலசாமி
தினம் கணக்கு போடச் சொல்லி போரடிக்கிற சாமி
கணக்குல மேதையின்னு பேரை எடுத்தவரு
கணக்கே இல்லாம புள்ளைங்களை பெத்தவரு
ஆண் ஏழு பெண் ஏழு பதினாலு.....

இந்த வாத்தியார்கள் எல்லாம் உங்கள் தந்தையை போலே
நீங்கள் மாணவர்கள் எல்லாம் பெத்த பிள்ளைகள் போலே
வேலிகள் போலிருந்து காப்பவர் இவரன்றோ
கேலிகள் பலவாறு செய்வது தவறன்றோ
என்னாகும் சொல்லுங்கள் எதிர்காலம்

பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே
நல்ல பேர் வாங்கணும் வாத்தியாரிடம்
வாங்கினால் வாழலாம் எந்த நாளிலும்

நல்ல பேர் வாங்குவோம் வாத்தியாரிடம்
வாங்கியே வாழுவோம் எந்த நாளிலும்
நல்ல பேர் வாங்குவோம் வாத்தியாரிடம்
வாங்கியே வாழுவோம் எந்த நாளிலும்



COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY