Kanni Penn Kannathin
Gramathu Kiligal
Hero Rajeev
Music Director Mani Raja
Lyricist Vali
Singers S.Janaki,P.Jayachandran
Year 1983
Song Lyrics

கன்னி பெண் கன்னத்தின் காயங்களே
தித்திக்கும் முத்தத்தில் ஆறுங்களேன்
காதல் நெஞ்சில் இன்று தேனோடுமே
போகும் வழி இன்று பூவாகுமே
பாவை நீ மாங்கனி பார்வையோ மார்கழி ( கன்னி )

தீயினில் பூவென பூத்திருந்தேன்
கண்களில் நீர்த்துளி சேர்த்திருந்தேன்
கண்ணே இனி ஏன் வேதனை
தேனில் இனி ஆராதனை

கண்ணுக்குள் கோயில் கட்டி
உன்னை வைத்தாள் தங்கக்கட்டி
வா...மாயவா...மார்பிலே தோயவா
கன்னி பெண் கன்னத்தின் காயங்களே
தித்திக்கும் முத்தத்தில் ஆறுங்களேன்...

ஆயிரம் ஆசையில் நான் மிதந்தேன்
அருந்திட வேண்டும் தேன் விருந்து
காதல் ஒரு போதை மழை
பாவை கண்ணில் காதல் கதை

தோளில் மீது கைகள் சேர்த்து
கண்கள் என்னும் ஜன்னல் சாத்து
வா....காதலி...என்னை நீ ஆதரி
கன்னி பெண் கன்னத்தின் காயங்களே
தித்திக்கும் முத்தத்தில் ஆறுங்களேன்..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY