Pudhu Yugam Theriyuthada
Anal Kaatru
Hero Rajesh
Music Director Sankar Ganesh
Lyricist Ilaiya Bharathi
Singers T.M.Soundarajan
Year 1983
Song Lyrics

புதுயுகம் தெரியுதடா உலகம்
புன்னகை புரியுதடா
சரித்திரம் படைக்குதடா எங்கும்
சமத்துவம் கிடைக்குதடா...

போர்வையினாலே பூகம்ப
மேட்டினை போர்த்திட முடியாது
வேர்வை நதிகளை காகித அணைகள்
தடுத்திட முடியாது

பிரளய உசுப்பலில் பிடரி சிலிர்த்திட
சிங்கங்கள் திரண்டிடுமே
ஜெகம் முழுவதும் செழித்திடுமே
புதுயுகம் தெரியுதடா உலகம்...

கண்களில் மின்னிடும் கனவுகள் எல்லாம்
கைகளில் மலரட்டுமே
கன்னத்தில் ஓடிடும் கண்ணீரும்
பொன் கதிரால் உலரட்டுமே

சினம் கொண்ட மக்களின்
மூச்சே இன்று அனல் காற்றானதுவே
புனல் ஊற்றாய் மாறிடுமே

புதுயுகம் தெரியுதடா உலகம்
புன்னகை புரியுதடா
சரித்திரம் படைக்குதடா எங்கும்
சமத்துவம் கிடைக்குதடா...
எங்கும் சமத்துவம் கிடைக்குதடா...
எங்கும் சமத்துவம் கிடைக்குதடா...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY