Unakkoru Purushan Varuvana
Kaanalukku Karai Yedhu
Hero Sankar
Music Director Chandrabose
Lyricist Vali
Singers S.P.Shailaja,B.Sasirekha
Year 1982
Song Lyrics

உனக்கொரு புருஷன் வருவானா
உருவத்த பருவத்த தொடுவானா
கதை கதையாக சொல்வானா
கதகதப்பெல்லாம் தருவானா

எதையெதையோ நெனச்சுகிட்டு
மனசுக்குள்ளே மயங்கிறியே
சிங்கார செல்லக் குட்டியே
எறும்பு வந்து திங்காத வெல்லக்கட்டியே...

ஈரோட்டு மஞ்சப் பூசி குளிப்பா
இவ எப்போதும் கொஞ்சி பேசி சிரிப்பா
கல்யாணம் ஆன ராத்திரி
இவ திண்டாடுவா அவன் பந்தாடுவான்
கன்னத்தில் கன்னம் வச்சு சேதி எல்லாம் பேசுவான்
அத்தானின் கைப்பட்டா கூசுவா... ( உனக்கொரு )

மாராப்பு சேலக்கட்டு மயக்கும் அது
மாப்பிள்ள நெஞ்சத் தொட்டு இழுக்கும்
கண்ணால பாட்டு பாடுவா அவன்
தாள் போடுவான் இவ பாய் போடுவா
ஆயிரம் ஆசைகளை நெஞ்சில் கொண்டு துடிப்பா
ஆனாலும் வெட்கப்பட்டு மறைப்பா ஹோய்....( உனக்கொரு )

அஞ்சாறு மாசம் போனா மசக்க அப்ப
மாங்காய நித்தம் கேட்பா கடிக்க
ஆங்...தன்னாலே பேசிக் கொள்ளுவா
அவ சந்தோஷத்த உடல் தள்ளாட்டத்த
மாமியார் பாத்துபுட்டு ஊருக்கெல்லாம் சொல்லுவா
தாயாகும் நல்ல நாள எண்ணுவா...ஹோய்... ( உனக்கொரு )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY